மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 20 ஆக 2021

அழவும் வைக்கும் சூரி

அழவும் வைக்கும் சூரி

பத்திரிகையாளராக இருந்து இயக்குனராக மாறிய இரா. சரவணன் இயக்கும் அடுத்த படம் சூர்யாவின் தயாரிப்பில் ஜோதிகா கதை நாயகியாக நடிக்கும் உடன்பிறப்பே.

முழுக்க முழுக்க குடும்பப் பின்னணியை அண்ணன் தங்கை பாசப் பிணைப்பைச் சுற்றி வரும் இந்த படத்தில் ஜோதிகா, சசிகுமாரோடு நடிகர் சூரியும் நடிக்கிறார். பல்வேறு படங்களில் ஹீரோவின் தோழனாக வந்து கலாய்ப்பதும் சிரிப்பதும் சிரிக்க வைப்பதுமாக இருக்கும் சூரிக்கு உடன்பிறப்பே படத்தில் வெயிட்டான பாத்திரம் என்கிறார்கள்.

சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனத்தில் உருவாகும் இப்படத்தின் கதையை ஜோதிகாவுக்காக கேட்டவர் அவரது மேனேஜர் தங்கதுரை. அப்போது, “என்கிட்ட சொன்ன மாதிரியே இந்தக் கதையை எடுத்திட்டீங்கன்னா, அடுத்த பாசமலர் இதுதான் என்றார். அப்படியே வந்திருக்கிறது” என்று கூறும் இயக்குனர் சரவணன், “உடன்பிறப்பே படத்தில் இரண்டு குடும்பங்களுக்கு இடையே அல்லாடுகிற ஆள் சூரி அண்ணன். சிரிக்க வைக்கிற அளவுக்கு இந்தப் படத்தில் அழ வைக்கவும் செய்வார். அப்படியொரு குணச்சித்திரப் பாத்திரம்” என்று இந்தப் படத்தில் சூரியின் கேரக்டரை பற்றி கோடிட்டுக் காட்டியிருக்கிறார்.

சூரியை வேற லெவலுக்கு அழைத்துப் போகும் உடன்பிறப்பே அக்டோபர் மாதம் அமேசான் தியேட்டரில் வெளியாகிறது.

-வேந்தன்

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

வெள்ளி 20 ஆக 2021