மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 19 ஆக 2021

ஷாரூக் - அட்லீ படத்தில் இன்னொரு நடிகை!

ஷாரூக் - அட்லீ படத்தில் இன்னொரு நடிகை!

கமர்ஷியலாகத் தொடர்ந்து ஹிட் கொடுப்பதென்பது அத்தனை சுலபமல்ல. அதற்கான நேர்த்தியும், கதைச்சொல்லலிலும், காட்சிமொழியிலும் புதுமையைக் காட்டும் இயக்குநர் அட்லீ. இவர் கையாளும் கதைகளின் மீது விமர்சனங்கள் இருந்தாலும், ஒவ்வொரு படமுமே பெரிய ஹிட்.

தமிழின் சூப்பர் ஸ்டார் நடிகரான விஜய்யை மூன்று முறை இயக்கியவர், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக் கானை இயக்க தயாராகி வருகிறார். ஷாரூக்கின் ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரிக்க இந்தப் படம் உருவாக இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இதுகுறித்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை இல்லை. எப்படியும், இந்த மாதம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிடும் என உறுதியான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

படத்தில் ஷாரூக் ஜோடியாக நடிக்கப் போவது யாரென்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருந்தது. மிகப்பெரிய சர்ப்ரைஸாக ஷாரூக் ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல்கள் சமீபத்தில் வெளியானது. அட்லீ இயக்குநராக அறிமுகமான ராஜா ராணி படத்தில் நடித்தார் நயன்தாரா. சொல்லப்போனால், நயன்தாராவின் கம்பேக் சினிமா ராஜா ராணி தான். அதன் பிறகு, அட்லீ இயக்கத்தில் விஜய்யுடன் பிகில் படத்தில் இணைந்து நடித்தார். ஒரு இயக்குநர் செட்டாகிவிட்டால் மீண்டும் மீண்டும் அதே இயக்குநர் படத்தில் ரிபீட்டாக நடிப்பது நடக்கும். அப்படியான, நடிகர்களுக்கான இயக்குநர் அட்லீ.

நயன்தாராவைத் தொடர்ந்து படத்தில் மற்றுமொரு பெண் லீட் ரோலுக்கு பாலிவுட் நடிகை ஒருவர் ஒப்பந்தமாகியிருப்பதாகத் தகவல். அமீர் கான் நடித்து வெளியான தங்கல் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான்யா மல்கோத்ரா. இப்போது, ஷாரூக் படத்தில் நடிக்க உறுதியாகியிருக்கிறாராம்.

படத்தில் மற்ற கலைஞர்கள், நடிகர்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இந்தப் படத்தை பிரமாண்டமாக உருவாக்க திட்டமிட்டு வருகிறதாம் தயாரிப்புத் தரப்பு. அதனால், அவசரப்படாமல் பொறுமையாக அறிவிப்பை வெளியிடலாம் என்று யோசிப்பதாகக் கூறுகிறார்கள். அதோடு, அட்லீ இயக்க ஷாரூக் நடிக்கும் படமானது 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும் ஒரு தகவல்.

- ஆதினி

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

வியாழன் 19 ஆக 2021