மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 19 ஆக 2021

சிம்புவைத் தொடர்ந்து யாரை இயக்குகிறார் வெங்கட் பிரபு?

சிம்புவைத் தொடர்ந்து யாரை இயக்குகிறார் வெங்கட் பிரபு?

தமிழ் சினிமாவில் கமர்ஷியல் படங்களில் கொஞ்சம் வெரைட்டி காட்டும் இயக்குநர்களில் ஒருவர் வெங்கட் பிரபு. இவரின் இயக்கத்திலும், தயாரிப்பிலும் படங்கள் ரிலீஸுக்கு நெருங்கிவிட்டன.

வெங்கட் பிரபு தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘கசட தபற’. இந்தப் படம் தயாராகி நீண்ட நாளாக ரிலீஸாக முடியாமல் கிடப்பில் இருந்தது. இந்த நிலையில், ஓடிடியில் வெளியாவது உறுதியாகியிருக்கிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாராகிவரும் படம் ‘மாநாடு’. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரமாண்ட பொருட்செலவில் இந்தப் படம் உருவாகி வருகிறது. யுவன் ஷங்கர் ராஜா படத்துக்கு இசையமைத்து வருகிறார். படத்துக்கான முழு படப்பிடிப்பும் முடிந்துவிட்டது. டப்பிங் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. எப்படியும் படத்தை இந்த வருட இறுதிக்குள் ரிலீஸ் செய்யும் திட்டத்தில் இருக்கிறார்கள்.

சிம்புவை இயக்கிவிட்ட வெங்கட் பிரபு அடுத்த கட்டமாக பான் இந்தியா படமொன்றை இயக்கத் தயாராகி வருகிறார். கன்னட நடிகர் சுதீப் ஹீரோவாக நடிக்க தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் ஒரு படத்தை இயக்க இருக்கிறாராம் வெங்கட் பிரபு.

இந்திய அளவில் ரீச் ஆகும் பொதுவான கதையாக இருக்க வேண்டுமென்பதில் தெளிவாக இருக்கிறார் வெங்கட் பிரபு. அதனால், அஜித் நடிப்பில் இவர் இயக்கிய மங்காத்தா படத்தின் ஸ்டைலில் ஒரு படத்தை க்ளாஸாக உருவாக்க இருக்கிறார் என்கிறார்கள்.

வெங்கட் பிரபுவின் நீண்ட நாள் விருப்பம் விஜய்யை இயக்க வேண்டும் என்பது. அஜித்தை இயக்கிவிட்டவர், விஜய்க்கும் ஒரு கதை வைத்திருந்தார். ஆனால், இந்தக் கூட்டணி இன்னும் அமையவில்லை.

- ஆதினி

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

6 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

3 நிமிட வாசிப்பு

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

வாகா எல்லையில் நடிகர் அஜித்

2 நிமிட வாசிப்பு

வாகா எல்லையில் நடிகர் அஜித்

வியாழன் 19 ஆக 2021