மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 18 ஆக 2021

விஜய், தனுஷைத் தொடர்ந்து சூர்யா மனு தள்ளுபடி!

விஜய், தனுஷைத் தொடர்ந்து சூர்யா மனு தள்ளுபடி!

வருமானவரிக்கு வட்டி செலுத்துவதில் இருந்து விலக்கு கோரிய நடிகர் சூர்யாவின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஏற்கனவே, நடிகர்கள் விஜய், தனுஷ் இருவரும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த காருக்கு வரி கட்டுவதில் இருந்த பிரச்சினையில் நீதிமன்றம் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது.

கடந்த 2010ஆம் ஆண்டில் நடிகர் சூர்யாவின் வீட்டில் வருமானவரித் துறை சோதனை நடத்தியது. இந்த சோதனைக்குப் பிறகு, 2007- 08, 2008-09 நிதியாண்டுக்கான வருமான வரியைத் தாக்கல் செய்ய வேண்டும் எனவும், இடைப்பட்ட ஆண்டுகளுக்கான வட்டியையும் செலுத்த வேண்டும் எனவும் வருமானவரித் துறை கூறியது. இதை எதிர்த்து சூர்யா தரப்பில் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சூர்யா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், வருமானவரி நிர்ணயம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் வருமானவரித் துறை மேல்முறையீடு தீர்ப்பாயம் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு முடிவு செய்தால், அதற்கான வருமான வரிக்கு வட்டி செலுத்துவதில் தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

வருமானவரித் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறியதாவது, வருமானவரி மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்கு சூர்யா முழு ஒத்துழைப்பு தராததால் வட்டி விலக்கு பெற உரிமையில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியன், சூர்யாவின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

-இராமானுஜம்

படக்குழுவினரைக் கண்கலங்க வைத்த கீர்த்தி சுரேஷ்

2 நிமிட வாசிப்பு

படக்குழுவினரைக் கண்கலங்க வைத்த கீர்த்தி சுரேஷ்

மத மாற்ற விழிப்புணர்வு குறித்து பேசும் ‘ருத்ர தாண்டவம்’!

23 நிமிட வாசிப்பு

மத மாற்ற விழிப்புணர்வு குறித்து பேசும் ‘ருத்ர தாண்டவம்’!

ஃப்ளைட்டில் ஃபைல்: அப்டேட் குமாரு

4 நிமிட வாசிப்பு

ஃப்ளைட்டில் ஃபைல்: அப்டேட் குமாரு

புதன் 18 ஆக 2021