மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 18 ஆக 2021

பீஸ்ட் படத்தை நிராகரித்த மிஷ்கின்.. நிஜ சம்பவம்!

பீஸ்ட் படத்தை நிராகரித்த மிஷ்கின்.. நிஜ சம்பவம்!

மாஸ்டரைத் தொடர்ந்து விஜய்க்கு அடுத்து தயாராகிவரும் படம் பீஸ்ட். இந்தமுறை விஜய்யை இயக்கும் வாய்ப்பு நெல்சன் திலீப்குமாருக்கு கிடைத்திருக்கிறது.

சொல்லப் போனால், விஜய்யின் 65வது படத்துக்கு இயக்குநராக உறுதியானவர் ஏ.ஆர்.முருகதாஸ். ஆனால், இவர் சொன்ன கதையிலிருந்த கருத்துவேறுபாட்டினால் ஏ.ஆர்.முருகதாஸுக்குச் சென்ற வாய்ப்பு, நெல்சனுக்குக் கிடைத்தது.

நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா & சிவகார்த்திகேயன் நடிக்க டாக்டர் படங்களை இயக்கியவர் நெல்சன். இவரின் படங்களில் ப்ளாக் ஹூமர் அசத்தலாக ஒர்க் அவுட் ஆகும். அப்படியான ஒரு மாஸ் படமாக பீஸ்ட் எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்யுடன் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர்களுடன் யோகிபாபு, விடிவி கணேஷ், மலையாள நடிகர் சாக்கோ, அபர்ணா தாஸ், டான்ஸிங் ரோஸ் ஷபீர் & இயக்குநர் செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துவருகின்றனர்.

இந்தப் படத்துக்கான முதல்கட்ட ஷூட்டிங் ஜார்ஜியாவில் நடந்தது. சென்னையில் மூன்று ஸ்டுடியோக்களில் செட் அமைத்து படப்பிடிப்பை நடத்திவருகிறது படக்குழு. எப்படியும், ஒன்றிரண்டு மாதங்களில் முழு படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்று சொல்லப்படுகிறது.

பீஸ்ட் படத்தில் விஜய்க்கு வில்லனாக செல்வராகவன் நடிக்கிறார் எனும் அறிவிப்பு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதைவிட, ஒரு சுவாரஸ்ய சம்பவமும் நடந்திருக்கிறது.

விஜய்க்கு வில்லனாக நடிக்க முதலில் இயக்குநரின் தேர்வாக இருந்தது இயக்குநர் மிஷ்கினாம். பீஸ்ட் படத்துக்காக விஜய்யை இயக்க உறுதியானதும் நேராக மிஷ்கினை போய் சந்தித்திருக்கிறார். மிஷ்கினை மனதில் வைத்தே ஸ்கிரிப்ட் எழுதப்பட்டதாகவும் கூறியிருக்கிறார். ஆனால், பிசாசு 2 படத்தின் பணிகளில் இருக்கிறார் மிஷ்கின். ஏற்கெனவே, ஒரு தயாரிப்பாளரிடம் கமிட்மெண்ட் கொடுத்துவிட்டதால், நடிக்க முடியாமல் போயிருக்கிறது. அப்படியில்லையென்றால், விஜய்க்கு வில்லனாக மிஷ்கினை திரையில் பார்த்திருக்கலாம்.

இயக்குநர் என்பதைத் தாண்டி, மிஷ்கின் நல்ல நடிகர். சவரக்கத்தி, சூப்பர் டீலக்ஸில் அற்புதம் ரோல் என அசத்தியிருப்பார். அதனால், விஜய்யுடன் நடித்திருந்தால் கிடைக்கும் வரவேற்பு வேறு ஒன்றாக இருந்திருக்கும். இருப்பினும், வேறு ஒரு தயாரிப்பாளருக்குக் கொடுத்த வாக்குறுதிக்காக விஜய்யுடன் நடிக்க வேண்டிய வாய்ப்பை நிராகரித்திருக்கிறார் மிஷ்கின்.

- தீரன்

விருதுகளை அள்ளிய அசுரன்!

2 நிமிட வாசிப்பு

விருதுகளை அள்ளிய அசுரன்!

கார்த்தி முடிவால் வட்டியில் சிக்கிய தயாரிப்பாளர்!

4 நிமிட வாசிப்பு

கார்த்தி முடிவால் வட்டியில் சிக்கிய தயாரிப்பாளர்!

ஐபிஎல்: மும்பையை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்!

6 நிமிட வாசிப்பு

ஐபிஎல்: மும்பையை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்!

புதன் 18 ஆக 2021