மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 18 ஆக 2021

குழப்பத்தில் சின்னதிரை நடிகர்கள் சங்கம்!

குழப்பத்தில் சின்னதிரை நடிகர்கள் சங்கம்!

தமிழ்நாடு சின்ன திரை நடிகர்கள் சங்கம் 2019ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அதே நிர்வாகிகளோடு செயல்பட வேண்டும் என்று சங்கங்களின் பதிவாளர் அறிவுறுத்தியிருக்கிறார்.

தமிழ்நாடு சின்னதிரை நடிகர்கள் சங்கத்தில் கடந்த இரண்டாண்டுகளாக கடும் பூசல் நடந்துகொண்டிருக்கிறது. சங்கத்தின் தலைவராக இருந்து வரும் ரவிவர்மா மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திர கலை விழாவுக்காக லஞ்சம் பெற்றார் என்று சக நிர்வாகிகளே குற்றம்சாட்டினார்கள்.

இதனை ஒப்புக் கொண்ட ரவிவர்மா அந்தப் பணத்தைத் திருப்பித் தந்துவிடுவதாகக் கூறினார். ஆனால் அதை ஏற்க மறுத்த அனைத்து நிர்வாகிகளும் ரவிவர்மாவை சங்கத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவியிலிருந்தே நீக்குவதாக அறிவித்தனர்.

ஆனால் இதனைச் செயல்படுத்தக் கூட்டிய பொதுக் குழுவில், கூச்சல் குழப்பம் நிலவி எந்த முடிவும் எடுக்கப்படாமல் போனதால் ரவி வர்மா இப்போது வரையிலும் தலைவராகத் தொடர்கிறார்.

தொடர்ந்து 2020டிசம்பர் மாதம் ரவி வர்மா தனது ஆதரவாளர்களைத் திரட்டி நடத்திய பொதுக் குழுவில் பெப்சியின் தலைவர் செல்வமணியின் தலைமையில் ரவிவர்மாவை நீக்குவது குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் ரவி வர்மா வெற்றி பெற்றாலும் அவருடன் தேர்தலில் வெற்றி பெற்றிருந்த சக நிர்வாகிகள் இதனை ஏற்கவில்லை. அதனால் அவர்கள் ராஜினாமா செய்வதாக அறிவித்துவிட்டு வெளியேறினார்கள்.

இதையடுத்து நடிகர் மனோபாலா தலைமையில் ஒரு குழுவினர் தனியாக நடிகர்கள் சங்கத்திற்கு அலுவலகம் அமைத்து தனியே செயல்பட்டார்கள். இந்நிலையில் அனைத்து நிர்வாகிகளையும் நீக்குவதாக அறிவித்த ரவிவர்மா அந்த இடங்களுக்குத் தன் விருப்பப்படியே சிலரை நியமித்துக் கொண்டார்.

இதை எதிர்த்து சங்கத்தின் பொருளாளரான ஜெயந்த் சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் புகார் செய்திருந்தார்.

இந்தப் புகார் மனுவை விசாரித்த பதிவாளர், ரவி வர்மா நியமித்த புதிய நிர்வாகிகளின் நியமனம் செல்லாது என்றும், 2019-ம் ஆண்டில் தேர்தலின் மூலமாக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் மட்டுமே பொறுப்பில் செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளது.

இதனை ரவி வர்மா குழு எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்று தெரியவில்லை.

-இராமானுஜம்

நாகசைதன்யா குடும்ப நிகழ்வில் கலந்துகொள்ளாத சமந்தா

3 நிமிட வாசிப்பு

நாகசைதன்யா குடும்ப நிகழ்வில் கலந்துகொள்ளாத சமந்தா

எஸ்பிபியின் மனதில் இளையராஜா

4 நிமிட வாசிப்பு

எஸ்பிபியின் மனதில் இளையராஜா

ராய் லட்சுமியிடம் ரோபோ சங்கர் நடந்து கொண்ட விதம்!

5 நிமிட வாசிப்பு

ராய் லட்சுமியிடம் ரோபோ சங்கர் நடந்து கொண்ட விதம்!

புதன் 18 ஆக 2021