மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 17 ஆக 2021

பொன்னியின் செல்வன்: லைகாவைத் தொந்தரவு செய்யாத மணிரத்னம்

பொன்னியின் செல்வன்: லைகாவைத் தொந்தரவு செய்யாத மணிரத்னம்

தமிழ் சினிமாவின் நீண்ட நாள் கனவானது, மணிரத்னத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எம்ஜிஆர், கமல்ஹாசன் எனப் பலரும் முயற்சி செய்த பொன்னியின் செல்வனைச் சாத்தியமாக்கிக் கொண்டிருக்கிறார் இயக்குநர் மணிரத்னம்.

இரண்டு பாகங்களாக உருவாகிவரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகத்துக்கானப் படப்பிடிப்பு இன்னும் 10 நாட்கள் மட்டுமே மீதமிருக்கிறது. அடுத்த வருட கோடைக்காலத்தில் பொன்னியின் செல்வன் திரையில் குதிரையைச் செலுத்த இருக்கிறான்.

முதல்கட்டப் படப்பிடிப்பைத் தாய்லாந்தில் தொடங்கியது படக்குழு. அதன்பிறகு, புதுச்சேரியிலும், சென்னையிலும், ஹைதாராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியிலும் எனப் படப்பிடிப்புகள் நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது.

வந்தியத்தேவனாக கார்த்தியும், ஆதித்த கரிகாலனாக விக்ரமும், அருள்மொழி வர்மனாக 'ஜெயம்' ரவியும், நந்தினியாக ஐஷ்வர்யா ராய், குந்தவையாக த்ரிஷா, பூங்குழலியாக ஐஸ்வர்ய லெக்ஷ்மி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்தப் படத்துக்கான திரைக்கதையை எழுத்தாளர்களான ஜெயமோகன் மற்றும் இளங்கோ குமரவேலுடன் இணைந்து எழுதியிருக்கிறார் மணிரத்னம். படத்துக்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவு ரவிவர்மன், கலை இயக்கம் தோட்டா தரணி.

புதிய அப்டேட்டாக, இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மத்தியப் பிரதேசத்தில் நடக்க இருக்கிறது. இந்த ஷூட்டிங்கில் விக்ரம் உட்பட பல நடிகர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். அதோடு, கூடுதலாக மற்றொரு தகவலும் தெரியவந்துள்ளது.

பொன்னியின் செல்வன் படத்தை லைகாவுடன் இணைந்து தயாரித்து வருகிறார் மணிரத்னம். இந்தப் படத்துக்காக மாதம் 10 கோடி ரூபாய் மணிரத்னத்திற்கு லைகா கொடுத்துவருகிறது. கொரோனாவுக்கு முன்பாக இப்படியாக ஒப்பந்தமிட்டிருக்கிறார்கள்.

கொரோனாவினால் படப்பிடிப்பு நடக்கவில்லை. படப்பிடிப்பு தாமதமாவதால் பட்ஜெட்டும் அதிகரித்துள்ளது. ஆனால், எதற்கும் லைகாவிடம் முறையிடாமல் மணிரத்னமே அதிகரித்த பட்ஜெட்டையும் கவனித்துக் கொண்டாராம். மற்ற இயக்குநர்கள் என்றால் தயாரிப்பாளரை தொந்தரவு செய்திருப்பார்கள். ஆனால், நிலமையைப் புரிந்துகொண்டு, படத்தை எப்படியாவது முடிக்க வேண்டுமென்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறாராம் மணிரத்னம்.

- தீரன்

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

செவ்வாய் 17 ஆக 2021