மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 17 ஆக 2021

ப்ரித்விராஜ் ரோலில் பிரபல பாலிவுட் ஹீரோ... காரணம் இதுதான்!

ப்ரித்விராஜ் ரோலில் பிரபல பாலிவுட் ஹீரோ... காரணம் இதுதான்!

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் 150ஆவது படம் ‘கைதி நம்பர் 150’. விஜய் நடித்து வெளியான கத்தி படத்தின் ரீமேக். இந்தப் படத்துக்குப் பிறகு, சிரஞ்சீவியின் 151ஆவது படமாக வரலாற்றுப் படமாக ‘சைரா நரசிம்மா ரெட்டி’ வெளியானது. தொடர்ந்து, 152ஆவது படமாக கொரட்டல சிவா இயக்கத்தில் ‘ஆச்சார்யா’ ரெடியாகி வருகிறது.

இந்த நிலையில், மீண்டுமொரு ரீமேக் படத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் சிரஞ்சீவி. சிரஞ்சீவியின் 153ஆவது படமாக லூசிஃபர் தெலுங்கு ரீமேக் உருவாகி வருகிறது.

மலையாள நடிகர் ப்ரித்விராஜ் இயக்குநராக அறிமுகமாக நடிகர் மோகன்லால் ஹீரோவாக நடித்து வெளியான திரைப்படம் ‘லூசிஃபர்’. மாஸ் கமர்ஷியல் டிராமாவாக ரிலீஸான இந்தப் படம் வசூல் ரீதியில் மிகப் பெரிய ஹிட்டானது. மலையாளத்தைத் தாண்டி, தமிழில் டப்பாகியும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக்கின் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது. இந்தப் படத்தை மோகன்ராஜா இயக்கி வருகிறார். சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், இவர் 2001இல் ஹனுமன் ஜங்ஷன் எனும் படம் தெலுங்கு படம் மூலமாகத்தான் இயக்குநராக அறிமுகமானார். தமிழில் வெற்றி இயக்குநராக நிரூபித்துவிட்ட நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தெலுங்கு சினிமாவில் படம் இயக்குகிறார்.

இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக தமன், சண்டை இயக்குநராக ஸ்டண்ட் சில்வா என மிகப்பெரிய டீம் பணியாற்றுகிறது. இந்த நிலையில், தெலுங்கு மட்டுமின்றி பாலிவுட்டிலும் இந்தப் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருக்கிறதாம்.

மலையாள வெர்ஷனில் ப்ரித்விராஜ் நடித்த ரோலில் பாலிவுட் நடிகர் சல்மான் கானை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் போய்க் கொண்டிருக்கிறது. மிகப்பெரிய சம்பளத்துக்கு நடிக்க வைக்கவும் திட்டமாம். சல்மான் கான் நடித்தால் படத்தின் நிறம் மாறும். பட்ஜெட் மாறும். படத்தின் மதிப்பும் கூடும். அதனால், இந்தியிலும் படத்தை வெளியிட மிகப் பெரியளவில் கைகொடுக்கும் என்பதே திட்டமாம். அதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது போய்க் கொண்டிருக்கிறது. விரைவிலேயே, அதிகாரபூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

- ஆதினி

அனபெல் சேதுபதி: இயக்குநர் தீபக் விளக்கம்!

5 நிமிட வாசிப்பு

அனபெல் சேதுபதி: இயக்குநர் தீபக் விளக்கம்!

கங்கனா ரணாவத் நேரில் ஆஜராக உத்தரவு!

2 நிமிட வாசிப்பு

கங்கனா ரணாவத் நேரில் ஆஜராக  உத்தரவு!

ரசிகர்களைக் கண்டித்த ரஜினி ரசிகர் மன்றம்!

2 நிமிட வாசிப்பு

ரசிகர்களைக் கண்டித்த ரஜினி ரசிகர் மன்றம்!

செவ்வாய் 17 ஆக 2021