மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 17 ஆக 2021

நெற்றிக்கண் ரீமேக்கில் நயன் ரோலில் இவரா?

நெற்றிக்கண்  ரீமேக்கில் நயன் ரோலில் இவரா?

நயன்தாரா நடிப்பில் மிலிந்த் ராவ் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியான படம் ‘நெற்றிக்கண்’.

ஹீரோவுக்கு ஜோடியாக நடித்து வந்தாலும், நாயகி முக்கியத்துவம் கொண்டப் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் நயன்தாரா. அப்படி, அவள் பட இயக்குநர் மிலிந்த் இயக்கத்தில் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் இணைந்து தயாரிக்க ‘நெற்றிக்கண்’ படம் தயாரானது.

கொரியாவில் வெளியான ‘ப்ளைண்ட்’ எனும் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் இது. இந்தப் படத்தில் நெகட்டிவ் ரோலில் அஜ்மல் நடித்திருக்கிறார். ஓடிடியில் வெளியான இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

படத்தின் கதை இதுதான். சிபிஐ அதிகாரியாக இருக்கும் நயன்தாராவிற்கு எதிர்பாராத விதத்தில் ஒரு விபத்து ஏற்பட்டுவிடுகிறது. அதனால், கண்பார்வையை இழக்கிறார். கண்மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கிறார் நயன்தாரா. இந்நிலையில், சைக்கோ ஒருவன் பெண்களை தொடர்ச்சியாக கடத்தி வருகிறான். அந்த சைக்கோவின் இலக்காக கண்பார்வையற்ற நயன்தாரா இருக்கிறார். போலீஸின் உதவியுடன் சைக்கோவை நயன்தாரா கண்டுபிடித்தாரா, கடத்தப்பட்ட பெண்கள் காப்பாற்றப்பட்டார்களா என்பதை த்ரில்லருடன் சொல்ல முயற்சி செய்திருக்கும் படம் ‘நெற்றிக்கண்’.

கொரிய ஒரிஜினல் படமான ப்ளைண்ட் படமே சிறப்பாக இருக்காது. அதை அப்படியே, ஒரு காட்சிக் கூட மாறாமல் எடுத்துவைத்திருக்கிறார்கள். கூடவே, நயன்தாராவின் மாஸ் காட்சிகள் படத்தில் கூடுதலாக இடம்பெற்றிருக்கும்.

வியாபார ரீதியாக ஹிட் என்பதால், இந்தப் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய இருக்கிறார்கள். தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையைப் பெற்றிருக்கிறார். அதோடு, அனுபவமிக்க மற்றும் மூத்த நடிகையை படத்தில் நடிக்க வைக்கவும் திட்டமிட்டிருக்கிறார். அதனால், நெற்றிக்கண் தெலுங்கு ரீமேக்கில் நயன்தாரா ரோலில் அனுஷ்காவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை துவங்கியிருக்காம்.

பயமுறுத்தாத த்ரில்லர் படமாக நெற்றிக்கண் இருப்பதாக தமிழ் விமர்சகர்கள் விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில், தெலுங்கில் எப்படியாக இருக்கப் போகிறதென பொருத்திருந்துப் பார்க்கலாம்.

அனுஷ்காவுக்கு கடைசியாக வெளியான பாகமதி, நிசப்தம் என இரண்டு படங்களுமே த்ரில்லர் படங்களே. ஆனால், இரண்டுமே பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை. இந்நிலையில், மீண்டுமொரு த்ரில்லர் ஜானரை ஒப்புக் கொள்வாரா என்பதும் யோசிக்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது.

- ஆதினி

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

2 நிமிட வாசிப்பு

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

மிஷ்கின் இயக்கத்தில் நடித்தது ஏன்?: விஜய்சேதுபதி

3 நிமிட வாசிப்பு

மிஷ்கின் இயக்கத்தில் நடித்தது ஏன்?: விஜய்சேதுபதி

வெங்கட்பிரபுவுடன் ஜோடி சேர்ந்த சினேகா

2 நிமிட வாசிப்பு

வெங்கட்பிரபுவுடன் ஜோடி சேர்ந்த சினேகா

செவ்வாய் 17 ஆக 2021