மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 17 ஆக 2021

காபூலுக்கு மிக அருகே...: அப்டேட் குமாரு

காபூலுக்கு மிக அருகே...: அப்டேட் குமாரு

அண்ணே கொஞ்சம் பணம் தேவைப்படுது கிடைக்குமானு செல்லைநோண்டிக்கிட்டிருந்த ஆபீஸ் சீனியர்கிட்ட கேட்டேன். இல்லேன்னா இல்லைனு சொல்லிட வேண்டியதுதானே... ‘தம்பி இப்பதான் காபூலுக்கு மிக அருகே அரை கிரவுண்டு நிலம் வாங்கறதுக்காக ஒரு பாய்கிட்ட பணம் கொடுத்தேன். அந்தாளும் அவசரமா இந்தியா வந்துட்டாராம். இப்ப நானே என்ன பண்றதுனு தவிச்சுக்கிட்டிருக்கேன். அவர் பணத்தை திரும்பக் கொடுத்துட்டார்னா உனக்குத் தர்றேன்’னாரு. உன் உலக அறிவுல உலக்கைய விட்டு ஆட்டனு சொல்லிவிட்டு கடுப்பாகி வந்துட்டேன்.

நீங்க அப்டேட்டை பாருங்க

amudu

எரிசக்தி உற்பத்தியில் சுயசார்பை எட்ட இலக்கு. -பிரதமர் மோடி.

நம் பயன்பாட்டிற்கு தேவையான பெட்ரோல், டீசல், கேஸ்சை நாமே உற்பத்தி பண்ணிக்கணுமோ..

கோழியின் கிறுக்கல்!!

எந்த ஒரு உறவையும் அதிகம் ஆழம் பார்க்காதீர்கள்,

பிறகு அதில் நீங்களே புதையக் கூடும்!!

amudu

மக்கள் ஆசி யாத்திரையை கோவையில் தொடங்குகிறார் மத்திய அமைச்சர் எல்.முருகன்.

கூட்டத்தைக் கூட்டி, அதை "கொரோனா ஆசி" யாத்திரை ஆகாமல் இருந்தால் சரி.

மயக்குநன்

இந்தியாவிலேயே குழப்பம் நிறைந்த கட்சி காங்கிரஸ் மட்டும்தான்!- அண்ணாமலை.

'பெகாசஸ்' மூலமா கண்டுபிடிச்சதா பாஸ்..?!

Delta Tamilian

இந்தியர்கள் அனைவருக்கும் நன்மை தரக்கூடிய திட்டம் ஒன்று வரும் நாட்களில் வர இருக்கிறது-சுதந்திர தின விழாவில் மோடி.

எது கேஸ் விலை ₹25 ஏத்துனதா?

உள்ளூராட்டக்காரன்

ஸ்டாலின்: பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைப்பு

மோடி: சிலிண்டர் விலை 25 ரூபாய் அதிகரிப்பு

ச ப் பா ணி

பொறுமையை சோதிப்பதில்

Sending&loading இரண்டும் முக்கிய பங்கு வகிக்கிறது

தர்மஅடி தர்மலிங்கம்

வெள்ளை அறிக்கை குறித்து சொல்ல வேண்டிய இடத்தில் சொல்வேன்; ஓ.பன்னீர்செல்வம்,

சொல்ல வேண்டிய இடம்னா ஒருவேளை, டெல்லி போய் சொல்லிட்டு வருவீங்களோ..?

மயக்குநன்

இந்தியாவிலேயே குழப்பம் நிறைந்த கட்சி காங்கிரஸ் மட்டும்தான்!- அண்ணாமலை.

'பெகாசஸ்' மூலமா கண்டுபிடிச்சதா பாஸ்..?!

கோழியின் கிறுக்கல்!!

போன் பண்ணி 'என்னடா பிஸியா'ன்னு கேட்டா நண்பன்!!

அதே 'வெட்டியா தானே இருக்கே'ன்னு பேச ஆரம்பித்தால் அவன் உயிர் நண்பன்!!

-லாக் ஆஃப்

என்னை கைது செய்ய வந்தால்...: கங்கனா

2 நிமிட வாசிப்பு

என்னை கைது செய்ய வந்தால்...: கங்கனா

ஐந்து உணர்வுகள்: ஞான ராஜசேகரன் ஆதங்கம்!

2 நிமிட வாசிப்பு

ஐந்து உணர்வுகள்: ஞான ராஜசேகரன் ஆதங்கம்!

மாநாடு ரிலீஸ் ஆனது எப்படி?

10 நிமிட வாசிப்பு

மாநாடு ரிலீஸ் ஆனது எப்படி?

செவ்வாய் 17 ஆக 2021