மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 16 ஆக 2021

சியான் 60 : நெருக்கடி கொடுக்கும் ஓடிடி தளம்!

சியான் 60 : நெருக்கடி கொடுக்கும் ஓடிடி தளம்!

விஜய் நடித்து வெளியான ‘மாஸ்டர்’ படத்தின் இணைத் தயாரிப்பாளர் செவன் ஸ்டுடியோஸ் நிறுவனர் லலித்குமார். இந்தப் படம் கொடுத்த பெரும் லாபத்தினால், அடுத்தடுத்து மூன்று பெரிய பட்ஜெட் படங்களை ஒரே நேரத்தில் துவங்கினார் தயாரிப்பாளர் லலித்குமார்.

விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் ‘காத்துவாக்குல ரெண்டுகாதல்’ மற்றும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ‘சியான் 60’. ஒரே நேரத்தில் மூன்று பெரிய பட்ஜெட் படங்களைத் தயாரிப்பதென்பது மிகப்பெரிய சவால். எதாவது சிக்கலென்றாலும் மற்றப் படங்களுக்கானப் பணிகளும் பாதிக்கப்படும் . திட்டமிட்டபடி படவேலைகள் நடக்கவில்லையென்றால் பட்ஜெட்டில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படும். ஒரே நேரத்தில் மூன்றுபடங்களை தயாரிப்பதால் பெரிய தொகை முடங்கும் அபாயம் இருக்கிறது. இவற்றையெல்லாம் அசால்டாக டீல் செய்துவருகிறார் லிலித்.

குறிப்பாக, விக்ரமுக்கு கோப்ரா படத்துக்குப் பிறகு துவங்கியது கார்த்திக் சுப்பராஜ் இயக்கிவரும் ‘சியான் 60’. ஆனால், இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிட்டது. அதோடு, எடிட்டிங், டப்பிங் பணிகளையும் விரைந்து முடித்துவிடும் பணிகளில் இருக்கிறது படக்குழு.

, ‘சியான் 60’ படத்தை தீபாவளிக்குப் பிறகு வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறதாம். அதற்குள் படம் தயாராகிவிடுமா என்பதும் தெரியவில்லை. இந்நிலையில், இந்தப் படத்துக்கான டிஜிட்டல் ப்ரீமியர் உரிமையை சோனி லிவ் நிறுவனத்துக்கு விற்பனை செய்துவிட்டார் லலித்.

அதாவது, திரையரங்கில் வெளியானப் பிறகு சோனி லிவ் ஓடிடியில் சியான் 60 படம் ஒளிபரப்பாகும். இந்த உரிமையை 11 கோடிக்கு விற்பனை செய்திருக்கிறது தயாரிப்பு தரப்பு. இதுவே, விக்ரமின் முந்தைய படமான கடாரம் கொண்டான் படத்துக்கான டிஜிட்டல் உரிமை 5 கோடிக்கு விலைபோனது நினைவிருக்கலாம். பொதுவாக, முந்தைய படத்தின் ரிசல்டும், வியாபாரமுமே அடுத்தப் படத்தின் வியாபாரத்தை முடிவுசெய்யும். ஆனால், இந்தப் படத்துக்கு பெரிய விலை போயிருக்கிறது. அதோடு, சேட்டிலைட் உரிமை எப்படியும் 6 கோடிக்கு விலைபோகுமென்கிறார்கள். ஆக, பட ரிலீஸூக்கு முன்பாக, 17 கோடிவரை வியாபாரம் செய்யப்படலாம் என டிரேடிங் வட்டாரங்கள் கணிக்கிறது.

ஓடிடி உரிமையைக் கைப்பற்றியிருக்கும் சோனி லிவ் நிறுவனம் படத்தை தீபாவளிக்கு முன்பாக வெளியிட வேண்டுமென அழுத்தம் கொடுத்துவருகிறதாம். பெரிய பணத்தை முடக்கியிருப்பதால் டிஜிட்டல் தளத்தின் அழுத்தத்துக்கும் பதில் சொல்லியாக வேண்டிய சூழலில் இருக்கிறார் லலித். அதனால், எதிர்பார்த்ததைவிட, விரைவில் படம் வெளியானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அதோடு, படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பை ஆகஸ்ட் 20ஆம் தேதி வெளியிட படக்குழு தயாராகிவருகிறது. அதற்கான தலைப்பை உறுதி செய்யும் பணிகள் மும்மரமாக போய்க் கொண்டிருக்கிறது.

சியான் 60 படத்தில் விக்ரமுடன் துருவ்விக்ரம், சிம்ரன், வாணிபோஜன் உள்ளிட்ட பலர் நடித்துவருகிறார்கள். சந்தோஷ் நாராயணன் படத்துக்கு இசையமைத்து வருகிறார். படத்தில் கேங்க்ஸ்டராக விக்ரமும், போலீஸ் அதிகாரியாக துருவ் விக்ரம் நடித்திருக்கிறார்கள்.

- தீரன்

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

3 நிமிட வாசிப்பு

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

படக்குழுவினரைக் கண்கலங்க வைத்த கீர்த்தி சுரேஷ்

2 நிமிட வாசிப்பு

படக்குழுவினரைக் கண்கலங்க வைத்த கீர்த்தி சுரேஷ்

உதயநிதி படத்தில் வடிவேலு?

3 நிமிட வாசிப்பு

உதயநிதி படத்தில் வடிவேலு?

திங்கள் 16 ஆக 2021