மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 16 ஆக 2021

நயன்தாராவுக்கு இணையான சம்பளம் கேட்கும் பூஜா ஹெக்டே

நயன்தாராவுக்கு இணையான சம்பளம் கேட்கும் பூஜா ஹெக்டே

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் பெறும் நடிகர் ரஜினிகாந்த். இவர் ஒவ்வொரு படத்துக்கும் நூறு கோடி சம்பளம் பெறுகிறார். அடுத்தடுத்த இடங்களில் விஜய் & அஜித் இடம்பெற்றுள்ளனர். விஜய் 70 கோடியும், அஜித் 50 கோடி வரையிலும் பெறுவதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, சூர்யா, தனுஷ், விக்ரம், உள்ளிட்ட நடிகர்கள் இடம்பெறுகிறார்கள்.

எப்போதுமே, நடிக நடிகைகள் பெறும் சம்பளம் ஹாட் டாபிக் ஆகிவிடுவது வழக்கம். ஒரு படம் பெரிய ஹிட்டாகிவிட்டதென்றால் அடுத்தப் படத்தில் சம்பளத்தை உயர்த்திவிடுகிறார்கள். அப்படியில்லையென்றால், தயாரிப்பாளர்களே சம்பளத்தை உயர்த்திக் கொடுக்கத் தயாராகிவிடுகிறார்கள். அதனால், கோடியில் சம்பள உயர்வும் நடக்கிறது.

நடிகர்களைப் போலவே, நடிகைகளில் அதிக சம்பளம் பெறும் தென்னிந்திய நடிகையென்றால் அது நயன்தாரா மட்டும் தான். லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா ஒரு படத்துக்கு 4லிருந்து 5 கோடிவரை சம்பளம் பெறுகிறார். ரஜினியுடன் ‘தர்பார்’, விஜய்யுடன் ‘பிகில்’, அஜித்துடன் ‘விஸ்வாசம்’ என தமிழின் டாப் நடிர்களுக்கு ஜோடியாக நடிக்கிறார். அதோடு, நாயகி முக்கியத்துவம் கொண்டப் படங்களிலும் சோலோவாக ஹிட் கொடுப்பதால் நயனின் சம்பளம் எப்போதுமே டாப்.

தற்பொழுது, நயன்தாராவுக்கு இணையாக சம்பளத்தை உயர்த்த விரும்புகிறாராம் நடிகை பூஜா ஹெக்டே. அல்லு அர்ஜூனுடன் ‘அல வைகுடன்புரமுலோ’ படத்தில் புட்ட பொம்மா பாடல் மூலமாக இந்திய சினிமாவெங்கும் பிரபலமானார் பூஜா ஹெக்டே.

பிரபாஸூடன் ராதே ஸ்யாம், சிரஞீவியுடன் ‘ஆச்சார்யா’ & விஜய்யுடன் பீஸ்ட் படங்களில் நடித்துவருவதால் அடுத்தப் படத்துக்கான சம்பளத்தை உயர்த்திவிட்டார் என்கிறார்கள். விஜய்யின் பீஸ்ட் படம் வரைக்கும் பூஜா ஹெக்டேவின் சம்பளம் 2லிருந்து 3 கோடிவரைக்கும் வாங்கிவந்தாராம்.

அடுத்ததாக, மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் படத்தில் மூன்றரைக் கோடி சம்பளம் கேட்கிறாராம். இதன்மூலமாக, நயன்தாராவுக்கு இணையான சம்பளத்தைத் தொட்டிருக்கிறார் பூஜா ஹெக்டே.

தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்த ‘முகமூடி’ படம் மூலமாக திரையுலகுக்கு அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன்பிறகு, தமிழில் எந்த வாய்ப்பும் வரவில்லை. தமிழ் சினிமாவே இவரை மறந்துவிட்டது. விடாமுயற்சியுடன் தெலுங்கு, இந்தி சினிமாக்களில் நடித்து மிகப்பெரிய ஹிட் நடிகையாகி, தற்பொழுது தமிழுக்கு வந்திருக்கிறார். அதுவும் பெரும் சம்பளத்துடன் என்பது மிகப்பெரிய வளர்ச்சிதான்.

- ஆதினி

அரண்மனை 3 படத்தை வாங்கிய உதயநிதி

4 நிமிட வாசிப்பு

அரண்மனை 3 படத்தை வாங்கிய உதயநிதி

ரூ.10 கோடியில் நடிகர் சங்கத்துக்கு கட்டிடம்: பிரகாஷ் ராஜ்

2 நிமிட வாசிப்பு

ரூ.10 கோடியில் நடிகர் சங்கத்துக்கு கட்டிடம்: பிரகாஷ் ராஜ்

ஆட்டிசம் பாதித்த பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ்

3 நிமிட வாசிப்பு

ஆட்டிசம் பாதித்த பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ்

திங்கள் 16 ஆக 2021