மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 16 ஆக 2021

திருமணம் எப்போது? நயன் பதில்!

திருமணம் எப்போது?  நயன் பதில்!

தமிழின் உச்ச நடிகர்களின் நேர்காணல் அத்திபூத்தாற் போலத்தான் நிகழும். ரஜினி, விஜய் மற்றும் அஜித்தின் நேர்காணல்கள் அரிதாதத்தான் நிகழும். அரசியலுக்கு வந்த பிறகு தடுக்கி விழுமிடமெங்கும் நேர்காணல்களைக் கமல் கொடுத்துவருவதால் இந்தப் பட்டியலில் அவரை சேர்க்க முடியவில்லை.

தன்னைப் பிரபலப்படுத்துவதற்காக மட்டுமே நேர்காணல்களை நடிகர்கள் கொடுக்கிறார்கள். வெற்றிப் பெற்று உச்சாணி கொம்புக்குச் சென்றதும் நேர்காணல்களை அதிகமாகத் தவிர்த்துவிடுகிறார்கள். அதற்கு எக்கச்சக்க காரணங்கள் இருக்கின்றன. சமீப காலங்களில் நேர்காணல்கள் என்பது பட புரொமோஷனுக்காக மட்டுமே கொடுக்கப்படுகிறது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 2.O படத்தின் புரொமோஷனுக்காக ரஜினி கொடுத்தப் பேட்டி செம வைரலானது நினைவிருக்கலாம். விஜய்யைக் கூட பட விழாக்களிலும், சிறப்பு நிகழ்ச்சிகளிலும் சந்தித்துவிடலாம். ஆனால், பேட்டியை விரும்பாத, ரசிகர்களை பட நிகழ்ச்சிகளில் சந்திக்காத நடிகராக அஜித் இருக்கிறார்.

நடிகர்களைப் போல நேர்காணல்களை அதிகமாகத் தவிர்க்கும் நடிகை என்றால் அது நயன்தாரா. ஒரு படத்தை கமிட் செய்யும்போது பட புரொமோஷனுக்கு வரமாட்டேன் என்பதையும் ஒப்பந்தத்தில் கட்டாயமாக இணைத்துவிடுவார். அதற்கு நயன்தாரா ஒரு காரணம் கூறுவார். என்னவென்றால், நயன்தாரா புரொமோஷனில் கலந்துகொள்ளும் படங்கள் பெரிதாக ஹிட்டாவதில்லை. அதுபோல, அவர் கலந்துகொள்ளாத படங்கள் பெரிய ஹிட்டாகியிருக்கிறது. இதுவே நயனின் செண்டிமெண்டாகவும் மாறிவிட்டது. இதற்குப் பின்னணியில், வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டினால் ஆரம்ப காலத்தில் நயன் கொடுத்தப் பேட்டியில் பேசியவைகள் சர்ச்சையாகியிருக்கிறது. அதனால், சமீப காலமாகப் பேட்டிகளை தவிர்த்துவிடுவார்.

தற்பொழுது, நயன்தாரா நடிப்பில் மிலிந்த் இயக்கத்தில் ஹாட்ஸ்டாரில் ரிலீஸாகியிருக்கும் படம் ’நெற்றிக்கண்’. நயனின் சொந்த தயாரிப்பு நிறுவனத்தில் உருவான படமென்பதால் பட புரொமோஷனுக்கு ஒப்புக்கொண்டு, தனியார் தொலைக்காட்சியில் பேட்டியும் கொடுத்திருக்கிறார்.

முதன்முறையாக, விக்னேஷ் சிவனுடனான காதல், தந்தை குரியன் பற்றி, ஃபேமிலி பற்றி என நிறைய விஷயங்களை ரசிகர்களுக்காகப் பகிர்ந்திருக்கிறார். அதோடு, நிச்சயமாகிவிட்டது என்பதை நேர்காணலில் வெளிப்படையாக அறிவித்துள்ளார் நயன்தாரா.

இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய டிடி அடுத்த கேள்வியாக திருமணம் செய்வீர்களா அல்லது லிவ்விங் டு கெதரா எனக் கேட்க, “நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன். திருமணம் செய்துகொண்ட பிறகு அறிவிப்பேன். ஆனால், அனைவருக்கும் சொல்லிவிட்டுத் திருமணம் செய்ய மாட்டேன். இதற்கு மேல் எதையும் கேட்காதே டிடி” எனக் கூறியுள்ளார்.

நயன்தாராவின் தந்தை குரியன் உடல்நிலை காரணமாகவே நிச்சயத்திற்கு சம்மதித்தார் என்று நம்முடைய தளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். திருமணம் குறித்து இப்போதுவரை எந்தமுடிவும் குடும்பத்தினர் எடுக்கவில்லை என்றே தெரிகிறது. அப்படி, திருமணம் செய்துகொண்டாலும் வெளிப்படையாக சொல்ல வேண்டிய அவசியம் நயனுக்கு இல்லை. தனிப்பட்ட வாழ்க்கையையும், சினிமா வாழ்க்கையையும் குழப்பிக் கொள்ளாமல் கச்சிதமாகப் பிரித்துப் பார்க்கிறார் நயன்தாரா.

நயன் நடிப்பில் அடுத்தடுத்து ரஜினியுடன் அண்ணாத்த, விஜய் சேதுபதியுடன் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படங்கள் உருவாகி வருகின்றன. யாருக்குத் தெரியும், காத்துவாக்குல ரெண்டு காதல் பட புரொமோஷனில் திருமணம் முடிந்துவிட்டதை அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அவரே அறிவிக்கும் வரை, அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை தெரிந்துகொள்ள நினைக்காமல், நடிகையாக அவரைக் கொண்டாடிக் கொண்டே இருக்கலாம். இதைத்தான், நயன்தாராவும் விரும்புகிறார்.

- ஆதினி

திறந்தவெளியில் ஜெய்பீம் படத்தைக் கண்டுகளித்த மக்கள்!

3 நிமிட வாசிப்பு

திறந்தவெளியில் ஜெய்பீம் படத்தைக் கண்டுகளித்த மக்கள்!

பிரமாண்டமாக நடக்கும் கத்ரினா கைப் திருமணம்!

2 நிமிட வாசிப்பு

பிரமாண்டமாக நடக்கும் கத்ரினா கைப் திருமணம்!

கபில் தேவ் உரிமையைப் பெற்ற பிரித்வி ராஜ்

2 நிமிட வாசிப்பு

கபில் தேவ் உரிமையைப் பெற்ற பிரித்வி ராஜ்

திங்கள் 16 ஆக 2021