மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 16 ஆக 2021

விமானப் பயணச் செலவுக்குள் இப்படியொரு தந்திரமா?

விமானப் பயணச் செலவுக்குள் இப்படியொரு தந்திரமா?

விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ. படத்தின் பட்ஜெட் அதிகமாகத் தொடங்கியதும் படத்துக்குக் கூடுதல் தயாரிப்பாளர் தேவைப்பட்ட சூழலில் இணைத் தயாரிப்பாளராக பட ரிலீஸுக்கான முழுபொறுப்பையும் ஏற்றுக்கொண்டார் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ லலித்குமார்.

லாக்டவுன் சிக்கலுக்கு நடுவே லாபகரமாக மாஸ்டர் படத்தை விற்பனை செய்ததாலும், வசூல் சாதனையைப் படைத்ததாலும் ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்ட தயாரிப்பாளரானார் லலித்குமார்.

இவரின் தயாரிப்பில் கோப்ரா, சியான் 60, காத்துவாக்குல ரெண்டு காதல், சாணிக்காயிதம் படங்கள் உருவாகி வருகின்றன. சின்னச்சின்ன விஷயங்களுக்கும் பெரிய செலவுகளைச் செய்கிறார். தயாரிக்கும் படங்களுக்காக ஆடம்பர செலவுகளை மேற்கொள்கிறார் என்று சினிமாத் துறையில் ஒரு பேச்சு நிலவும். ஏனெனில், இந்தியாவுக்குள் எங்கு ஷூட்டிங் என்றாலும் படக்குழுவினரை தனி விமானத்தில் அனுப்பிவைப்பார் லலித்குமார்.

வெளியிலிருந்து பார்க்கும்போது, விமானப் போக்குவரத்து என்றாலே மிகப்பெரிய செலவு பிடிக்கும் ஒன்றாகத் தெரியும். பொதுவாக, தயாரிப்பாளர்கள் பெரிய நடிகர்களை விமானத்திலும், தொழில் நுட்பக் கலைஞர்களை ரயிலிலும் படப்பிடிப்பு பகுதிக்கு அனுப்பிவைப்பார்கள். ஆனால், லலித் கொஞ்சம் வித்தியாசமானவர். படக்குழுவினரை விமானத்தில் பறக்கவிடுகிறார்.

சமீபத்தில் சியான் 60 ஷூட்டிங் வட இந்தியப் பகுதிகளில் நடந்துமுடிந்தது. இந்தப் படக்குழு விமானத்தில் சென்னை திரும்பியதும், கோப்ரா ஷூட்டிங்கிற்காக படக்குழுவை அதே விமானத்தில் அனுப்புகிறார். இந்த விமானச் செலவுகள் லலித்துக்கு அதிக செலவைப் பிடிக்குமா என விசாரித்தால் புது தகவல் கிடைத்தது.

ரயில் போக்குவரத்து என்றாலே குறைந்தது ஒன்றிரண்டு நாட்கள் எடுக்கும். சென்னையில் பயணத்தைத் தொடங்கும் நாளிலிருந்தே தொழிலாளர்களுக்கான நாள் கணக்கு சம்பளம் துவங்கிவிடும். அதோடு, அனைவருக்குமான சாப்பாடு செலவு, பயண நேர விரயம் இவையெல்லாம் வேறு இருக்கிறது. இவற்றையெல்லாம் ஒப்பிடும்போது ஒருசில மணிநேர விமானப் பயணம் பெரிய லாபம் என்கிறார்கள். அதோடு, பல்க் புக்கிங் செய்வதால் பயண டிக்கெட்டுக்கான விலையும் பெருமளவில் குறைவாகத் தான் இருக்குமாம்.

கொரோனா சூழல் நிறைந்த இந்தக் காலக்கட்டத்தில் கலைஞர்களின் ஆரோக்கியத்திலும் அக்கறைக் கொண்டு இந்த ஏற்பாட்டை மேற்கொள்கிறாராம் லலித். அதற்குள், லாபகர நோக்கும் இருப்பதாகப் பேசிக்கொள்கிறார்கள் கோலிவுட்டினர்.

- தீரன்

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

அர்ஜுன் மீது 'மீ டூ 'புகார்: விரைவில் விசாரணை அறிக்கை!

2 நிமிட வாசிப்பு

அர்ஜுன் மீது 'மீ டூ 'புகார்:  விரைவில் விசாரணை அறிக்கை!

அஜித்துக்கு கைதட்டல் வாங்கிக்கொடுத்த சிவசங்கர்: கே.எஸ்.ரவிகுமார் ...

3 நிமிட வாசிப்பு

அஜித்துக்கு கைதட்டல் வாங்கிக்கொடுத்த சிவசங்கர்: கே.எஸ்.ரவிகுமார்

திங்கள் 16 ஆக 2021