மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 15 ஆக 2021

கொற்றவை - கதை அல்ல; தமிழர்கள் வரலாறு!

கொற்றவை - கதை அல்ல; தமிழர்கள் வரலாறு!

வரலாற்று பின்னணியில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்குத் தமிழ் ரசிகர்களிடையே எப்போதும் அதிக வரவேற்பு உண்டு. அந்த வகையில் சி.வி.குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கொற்றவை தி லெகசி’ படத்தின் டீஸர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

‘இது கதையல்ல, 2,000 வருட நம்பிக்கை’ என்று டீசரில் இடம் பெற்ற வசனம் படத்துக்கான எதிர்ப்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

யுபிஎஸ்சி பயிற்சியாளராக இருக்கும் வடிவு, ஒருகட்டத்தில் புதையல் ஒன்றை தேட ஆரம்பிக்கிறார் . இந்தப் பயணத்தின்போது பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடைபெறுகின்றன. வடிவு ஏன் இந்தப் புதையல் வேட்டையில் ஈடுபட்டுள்ளார், அவருக்கும் புதையலுக்கும் என்ன தொடர்பு என்பதே கொற்றவை படத்தின் கதைகளம்.

இந்தத் திரைப்படம் பாண்டியர்களின் வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது என்று சி.வி.குமார் கூறுகிறார்.

படத்தை பற்றி அவர் மேலும் கூறுகையில், “இளம் வயது முதலே எனக்கு வரலாற்றில் ஆர்வம் அதிகம். எனது தந்தையின் அலுவலகத்தில் ஒரு சுற்றுலா வழிகாட்டியாகப் பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்குச் சென்றபோது வரலாறு மற்றும் தொல்லியல் துறையில் அதிக ஆர்வம்காட்ட ஆரம்பித்தேன்.

சினிமா துறைக்கு வந்தபோது சரித்திரப் படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது . இப்போது அந்த ஆசை நிறைவேறியுள்ளது. கொற்றவையின் முதல் பகுதி ஒரு ஆரம்பம் மட்டும்தான். 70 சதவிகிதம் சமகாலமாகவும் 30 சதவிகிதம் வரலாற்று பின்னணியிலும் உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டாவது மற்றும் மூன்றாவது பாகங்கள் முழுக்க சாகசம் நிறைந்தவையாக இருக்கும்” என்றார்.

படத்தின் கதாநாயகன் ராஜேஷ் கனகசபை கூறுகையில், “படப்பிடிப்பின் முதல் நாளில் இருந்தே ஒரு அச்சம் கலந்த சுவாரஸ்யம் இருந்தது. இந்த அனுபவம் எனக்குப் புதிதாக இருந்தது. இரண்டாம் பாகம் இதைவிட பிரமாண்டமாக இருக்கும் என்றும், அதற்கு இன்னும் அதிக உழைப்பு தேவைப்படும் என்று இயக்குநர் கூறியுள்ளார். இரண்டாம் பாகத்துக்கு மனதளவில் தயாராக இருக்கிறேன்” என்றார்.

படத்தின் கதாநாயகி சந்தனா ராஜ் ஒரு தொல்பொருள் ஆய்வாளராக வருகிறார். “எங்கள் மீது நம்பிக்கை வைத்ததற்காக சி.வி.குமார் சாருக்கு நன்றி சொல்ல வேண்டும். அவர் எங்கள் மீது வைத்த நம்பிக்கை எங்களை மேலும் பொறுப்புடன் செயல்பட வைத்தது. இந்தப் படம் ஒரு மிக பெரிய அனுபவப் பாடமாக இருந்தது” என்று தெரிவித்தார் சந்தனா ராஜ்.

மயில் பிலிம்ஸ் டாக்டர் கே.பிரபு தயாரிக்கும் இந்தப் படத்துக்கு பத்திரிகையாளர், எழுத்தாளர் தமிழ்மகன் வசனம் எழுதியுள்ளார். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார்.

மூன்று பாகங்களாக தயாராகி வரும் இந்தப் படம் குறிப்பிட்ட இடைவெளியில் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகவுள்ளது. ‘கொற்றவை தி லெகசி’ என்று பெயரிடப்பட்டுள்ள முதல் பாகத்தின் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது.

எழுத்து & இயக்கம்: சி.வி.குமார்

வசனம்: தமிழ்மகன்

இசை: ஜிப்ரான்

ஒளிப்பதிவு: பிரகாஷ்

படத்தொகுப்பு: இக்னேஷியஸ் அஷ்வின்

நடிகர்கள்: ராஜேஷ் கனகசபை, சந்தனா ராஜ், சுபிக்‌ஷா, அனுபமா குமார், கவுரவ் நாராயணன், பவன், வேல.ராமமூர்த்தி, அபிஷேக், வேலு பிரபாகரன் , நாகா

தயாரிப்பு நிறுவனம்: மயில் ஃபிலிம்ஸ், திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்

தயாரிப்பாளர்கள்: டாக்டர் கே.பிரபு, சி.வி.குமார்.

-இராமானுஜம்

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

3 நிமிட வாசிப்பு

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

ஞாயிறு 15 ஆக 2021