மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 15 ஆக 2021

அண்ணாத்த பட வில்லன் அபிமன்யூ சிங் யார் தெரியுமா ?

அண்ணாத்த பட வில்லன் அபிமன்யூ சிங் யார் தெரியுமா ?

ரஜினி நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘ அண்ணாத்த’. சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு இமான் இசையமைத்துவருகிறார்.

ரஜினியுடன் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்திசுரேஷ், பிரகாஷ் ராஜ், ஜாக்கி ஷெரப், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தீபாவளி ஸ்பெஷலாக வருகிற நவம்பர் 04ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. அதோடு, ரஜினியும் படத்துக்கான டப்பிங் பணிகளை மேற்கொண்டுவருகிறார்.

இந்நிலையில், படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் அபிமன்யூ சிங் இணைந்திருப்பதாக தயாரிப்புத் தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழில் விஜய்க்கு வில்லனாக வேலாயுதம் & தலைவா, விக்ரமுக்கு வில்லனாக 10 எண்றதுக்குள்ள, கார்த்திக்கு வில்லனாக தீரன் அதிகாரம் ஒன்று படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் இவருக்கு ஐந்தாவது படமிது. ஏற்கெனவே, ரஜினியின் முந்தைய படங்களான 2.0 & தர்பாரிலும் பாலிவுட் நடிகரே வில்லனாக நடித்தது குறிப்பிடத்தக்கது.

பேமிலி டிராமாவாக உருவாகும் அண்ணாத்த படத்தில் அபிமன்யூ ரோல் எப்படி இருக்கப் போகிறதென்பதே கொஞ்சம் சுவாரஸ்யமாக இருக்கும் என்றே தெரிகிறது. தமிழில் ரஜினியைப் போல நான்கு பெரிய பட்ஜெட் படங்கள் இவர் வசமிருக்கிறது.

அக்‌ஷய்குமார், அஜய்தேவ்கன், ரன்வீர்சிங் நடிப்பில் ரோஹித் ஷெட்டியின் ‘சூரியவன்ஷி’, அர்ஜூன் ராம்பாலின் ‘தி பேட்டில் ஆஃப் பீமா கொரிகோன்’ கார்த்திக் சுப்பராஜின் ஜிகர்தண்டா படத்தின் பாலிவுட் ரீமேக்கான அக்‌ஷய்குமாரின் ‘பச்சான் பாண்டே’ மற்றும் 2002ல் நடந்த அக்‌ஷர்தம் கோவில் தாக்குதலை மையமாக் கொண்டு உருவான State Of Seige: Temple Attack படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தா ஷூட்டிங் மட்டுமே அண்ணாத்த ஷூட்டிங்கில் மீதமிருக்கிறது. ஆக, கதைப்படி கொல்கத்தாவைச் சேர்ந்த வில்லனாக இவர் நடிக்கிறார் என்பது மட்டும் உறுதியாகியிருக்கிறது.

- ஆதினி

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

3 நிமிட வாசிப்பு

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

ஞாயிறு 15 ஆக 2021