மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 15 ஆக 2021

இரண்டாவது டெஸ்ட்: மூன்றாம் நாள் முடிவில் இங்கிலாந்து ஆல் அவுட்!

இரண்டாவது டெஸ்ட்: மூன்றாம் நாள் முடிவில் இங்கிலாந்து ஆல் அவுட்!

லார்ட்ஸ் டெஸ்டில் மூன்றாம் நாள் முடிவில் இங்கிலாந்து 391 ரன்னுக்கு ஆல் அவுட்டான நிலையில் ஜோ ரூட் 180 அவுட் ஆகாமல் நிலைத்து நின்று சாதனை படைத்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்ஸில் 364 ரன்கள் குவித்தது. ரோகித் சர்மா 83 ரன்களில் ஆட்டமிழந்தார். கே.எல்.ராகுல் 129 ரன்னில் அவுட்டானார். ரிஷப் பண்ட் 37 ரன்னிலும், ஜடேஜா 40 ரன்னிலும் வெளியேறினர்.

இங்கிலாந்து சார்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளும், ஆலி ராபின்சன் மற்றும் மார்க் வுட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ரோரி பர்ன்ஸ் 49 ரன்னில் ஷமியிடம் வீழ்ந்தார். பேர்ஸ்டோவ் அரை சதமடித்து 57 ரன்னில் அவுட்டானார்.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் கேப்டன் ஜோ ரூட் பொறுப்புடன் ஆடி சதமடித்தார்.

இங்கிலாந்து அணி கேப்டனாக ரூட் இதுவரை 11 சதங்களை அடித்துள்ளார். இதன் மூலம் அதிக சதங்கள் அடித்த இங்கிலாந்து வீரர்களில் ஜோ ரூட் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். 33 சதங்களுடன் குக் முதல் இடத்திலும் 23 சதங்களுடன் கெவின் பிட்டர்சன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

ஒரு ஆண்டில் அதிக சதங்கள் அடித்த இங்கிலாந்து கேப்டனுக்கான பட்டியலில் 5 சதங்கள் அடித்து ஜோரூட் முதல் இடத்தில் உள்ளார். இதற்கு முன்பு 1990இல் கிரஹாம் கூச் 4 சதங்கள் அடித்திருந்திருந்தார். இந்த சாதனையை ரூட் 11 வருடங்கள் கழித்து முறியடித்துள்ளார்.

நேற்று (ஆகஸ்ட் 14) மூன்றாம் நாள் முடிவில் இங்கிலாந்து 391 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜோ ரூட் 180 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தார். தற்போது இங்கிலாந்து 27 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்தியா சார்பில் சிராஜ் 4 விக்கெட்டுகள், இஷாந்த் சர்மா 3, ஷமி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இந்தியாவுக்கான வெற்றி வாய்ப்பு சற்று குறைந்துள்ள நிலையில் இன்று நான்காம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

-ராஜ்

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

மாறனின் படத்தைப் புகழ்ந்து தள்ளிய இயக்குநர்கள்!

4 நிமிட வாசிப்பு

மாறனின் படத்தைப் புகழ்ந்து தள்ளிய இயக்குநர்கள்!

சொந்தப்பட புரொமோஷனுக்கு மட்டும் போலாமா?: கே.ராஜன்

13 நிமிட வாசிப்பு

சொந்தப்பட  புரொமோஷனுக்கு மட்டும் போலாமா?: கே.ராஜன்

ஞாயிறு 15 ஆக 2021