மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 14 ஆக 2021

தெலுங்கில் இசையமைப்பாளராகும் அனிருத்

தெலுங்கில் இசையமைப்பாளராகும் அனிருத்

தமிழ் சினிமாவின் டிரெண்டிங் இசையமைப்பாளர் அனிருத். தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கிய ‘3’ படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படத்திலேயே உலகத்தை திரும்பிப் பார்க்கவைத்தார். ஒய் திஸ் கொலவெறி பாடல் யூடியூப்பில் வைரலானது. அதன்பிறகு, அஜித், விஜய், ரஜினி, கமல் என தமிழின் முன்னணி நடிகர்களின் ஃபேவரைட் இசையமைப்பாளராகவே மாறினார் அனி.

அனிருத்தின் இசையமைப்பில் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’, கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’, விக்னேஷ் சிவனின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, மீண்டும் சிவகார்த்திகேயனின் ‘டான்’ தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ & விஜய்யின் பீஸ்ட் படங்கள் உருவாகிவருகிறது.

தமிழில் செம பிஸியாக இருந்தாலும் தெலுங்கிலும் அவ்வப்போது பாடல் பாடுவது, இசையமைப்பதென கவனம் செலுத்திவந்தார். அதோடு, பவன்கல்யாணின் ‘அஞ்ஞாதவாசி’ , நானி நடிப்பில் கேங்க் லீடர் & ஜெர்ஸி படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். அதுமட்டுமல்ல, சமீபத்தில் ராஜமெளலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர். & ராம்சரண் நடிப்பில் உருவாகிவரும் ஆர் ஆர் ஆர் படத்தின் ‘நட்பு’ பாடலைப் பாடியுள்ளார். அந்தப் பாட்டும் இந்தியளவில் டிரெண்டானது.

ராம்சரண் நடிப்பில் ஷங்கர் இயக்க இருக்கும் படத்துக்கும் அனிருத் இசையமைப்பார் என்று சொல்லப்பட்டது. ஆனால், தமன் ஒப்பந்தமாகியிருந்தாலும் அனிருத் பெயர் பேச்சுவார்த்தையில் இருந்தது நினைவுக்கூறத்தக்கது. தற்பொழுது தெலுங்கு இயக்குநர் கொரட்டல சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் உருவாக இருக்கும் படத்துக்கு அனிருத் இசையமைக்க ஒப்பந்தமாகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

பெரும்பாலும் தெலுங்கு திரைப்படங்களென்றாலே தமன் அல்லது தேவி ஸ்ரீபிரசாத் இருவரில் ஒருவரே இசையமைப்பாளராக இருப்பார்கள். இருவரின் இசையைக் கேட்டு சலித்துப் போய்விட்டார்கள் ரசிகர்கள். அடுத்தடுத்து எக்கச்சக்கப் படங்களை கையில் வைத்திருப்பதால் பெஸ்ட் இசையென்பது அவ்வப்போது மட்டுமே இருவரிடமிருந்தும் வருகிறது. அதனால், புதிய இசையைத் தேடுகிறார்கள் தெலுங்கு இயக்குநர்கள். ஆக, அந்த லிஸ்டுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக அனிருத் நுழைய இருப்பதாக கணிக்கப்படுகிறது.

- ஆதினி

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

3 நிமிட வாசிப்பு

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

உதயநிதி படத்தில் வடிவேலு?

3 நிமிட வாசிப்பு

உதயநிதி படத்தில் வடிவேலு?

வடிவேலு படத் தலைப்பு: சிவகார்த்திகேயன் கருத்து!

3 நிமிட வாசிப்பு

வடிவேலு படத் தலைப்பு: சிவகார்த்திகேயன் கருத்து!

சனி 14 ஆக 2021