மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 13 ஆக 2021

அண்ணாத்த : ரஜினி ஷூட்டிங் முடிவதெப்போது?

அண்ணாத்த : ரஜினி ஷூட்டிங் முடிவதெப்போது?

இப்போதைய சூழலில் ‘சீக்கிரம் படப்பிடிப்பை முடியுங்கள்’ என இரண்டு படங்கள் ரசிகர்களை புலம்ப விட்டுக் கொண்டிருக்கிறது. ஒன்று, அஜித்தின் வலிமை. மற்றொன்று ரஜினியின் அண்ணாத்த. வலிமையில் இன்னும் வெளிநாடு ஷூட்டிங் மட்டுமே. சீக்கிரம் முடிந்துவிடும். அதுபோல, இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது அண்ணாத்த.

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் 168வது படம் ‘அண்ணாத்த’. வீரம், விவேகம், வேதாளம் மற்றும் விஸ்வாசம் என அஜித்துக்கு நான்கு ஹிட் கொடுத்த சிவா இயக்கிவருகிறார். சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் டி.இமான் இசையமைப்பில் படம் தயாராகிவருகிறது.

கொரோனா முதல் அலை துவங்குவதற்கு முன்பு ‘அண்ணாத்த’ துவங்கியது. அப்போதே, 60% படப்பிடிப்பை படக்குழு முடித்துவிட்டது. மீதிப் படப்பிடிப்புக்காக கடந்த டிசம்பரில் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு துவங்கியது. ஆனால், படக்குழுவில் ஏற்பட்ட தொற்றுக் காரணமாக படப்பிடிப்புத் தள்ளிப் போனது. இறுதியாக, கடந்த மார்ச் மாதம் படப்பிடிப்பு துவங்கி முக்கால் பாக படப்பிடிப்பு முடிந்துவிட்டது. குறிப்பாக, ரஜினிக்கான பெரும்பாலான காட்சிகளை முடித்துவிட்டது. அண்ணாத்த ஷூட்டிங் முடியும் போது கொரோனா இரண்டாம் அலை தீவிரமானது.

இந்தப் படத்தின் 90% படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், இறுதிக் கட்ட ஷூட்டிங்கிற்காக கொல்கத்தா செல்ல இருந்தது. அதற்கு முன்பாக, ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் சில காட்சிகள் படமாக்கப்பட்டது. தற்பொழுது, படக்குழு லக்னோவில் படப்பிடிப்பு நடத்திவருகிறது.

அதன்பிறகு, கொல்கத்தாவில் ஷூட்டிங்கைத் துவங்குகிறார்களாம். கொல்கத்தாவில் ஆகஸ்ட் 19வரை ஷூட்டிங் நடக்க இருக்கிறது. ஆகஸ்ட் 20ல் சென்னை திரும்பியதும் ரஜினி கலந்துகொள்ள மூன்று நாட்கள் ஷூட்டிங் நடக்க இருக்காம். அதோடு, படத்தின் படப்பிடிப்பை முடிக்கிறார்கள்.

கொல்கத்தா, லக்னோ ஆகிய பகுதிகளில் காம்பினேஷன் ஷாட், பேட்ச் ஒர்க் ஆகியவை போய்க் கொண்டிருக்காம்.

அண்ணாத்த படம் தீபாவளி பண்டிகைக்கு நவம்பர் 04ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. கிராமத்தில் நடக்கும் கதையாகப் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் சிவா. படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சதீஷ், சூரி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.

- ஆதினி

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

6 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

3 நிமிட வாசிப்பு

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

வாகா எல்லையில் நடிகர் அஜித்

2 நிமிட வாசிப்பு

வாகா எல்லையில் நடிகர் அஜித்

வெள்ளி 13 ஆக 2021