மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 13 ஆக 2021

வலிமை: இரண்டாவது சிங்கிளைத் தயார் செய்த யுவன்

வலிமை: இரண்டாவது சிங்கிளைத் தயார் செய்த யுவன்

ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘வலிமை’. இந்தப் படத்துக்காக ரசிகர்கள் வெறித்தனத்துடன் காத்திருக்கிறார்கள். திடீர் சர்ப்ரைஸாக, யுவன் ஷங்கர் ராஜா இசைக் கோர்ப்பில் படத்தின் முதல் சிங்கிளான ‘நாங்க வேற மாதிரி’ பாடல் வீடியோவானது யூடியூப்பில் வெளியானது.

வலிமை பாடல் வெளியான 24 மணிநேரத்தில் 9 மில்லியன் வியூவ்ஸையும், 1.01 மில்லியன் லைக்குகளையும் பெற்றது. இன்றுவரை, யூடியூப்பில் டிரெண்டிங்கில் டிராவல் செய்துவருகிறது நாங்க வேற மாதிரி. இந்தப் பாடலை அனுராக் குல்கர்னியுடன் இணைந்து யுவன் பாடியிருந்தார். அதோடு, இந்தப் பாடலை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியிருந்தார். இதுவரை, யூடியூப்பில் 15 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

முதல் சிங்கிள் கொடுத்த வெறித்தனம் குறைவதற்குள் இரண்டாவது சிங்கிளை இணையத்தில் பறக்கவிட படக்குழு திட்டமிட்டிருக்கிறதாம். சமீபத்தில், வெங்கட் பிரபு ரசிகர்களுடன் உரையாடும்போது வலிமை குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார். வலிமை படத்தின் இரண்டாவது சிங்கிளை யுவன் தயார் செய்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

கூடுதலாக, அஜித்தின் தீவிர ரசிகரான சிம்பு நடிப்பில் மாநாடு படமும் தயாராகிவருகிறது. இந்தப் படத்துக்கும் இசை யுவன் ஷங்கர் ராஜா தான். இந்தப் படத்திலிருந்து முதல் சிங்கிள் வெளியாகி செம ஹிட்டானது. இந்தப் படத்திலிருந்தும் இரண்டாவது சிங்கிள் விரைவில் வெளியாக இருப்பதாகவும் வெங்கட் பிரபு ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

தற்போது,வலிமை படத்துக்கான ஹைதராபாத் ஷூட்டிங்கில் இருக்கிறார் அஜித். நேர்கொண்டப் பார்வை படத்தைத் தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில் இரண்டாவது படம் இது. நீரவ் ஷா ஒளிப்பதிவு மேற்கொண்டுவரும் இந்தப் படத்தில் அஜித்துடன் ஹீமா குரேஷி, கார்த்திகேயா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

வலிமை பட ரிலீஸ் குறித்த எந்தத் தகவலும் இன்னும் உறுதியாகவில்லை. இந்த வருட ரிலீஸென்றால் ஆயுத பூஜையான அக்டோபர் 13இல் வெளியாகும். அப்படியில்லையென்றால், அடுத்த வருட பொங்கலுக்கு விஜய்யின் பீஸ்ட் படத்துக்குப் போட்டியாக வெளியாகும் என்பதே இப்போதைக்கு உறுதியாகியிருக்கும் தகவல்.

வலிமை படத்துக்குப் பிறகு, மீண்டும் ஹெச்.வினோத் - போனி கபூர் - அஜித் கூட்டணி மூன்றாவது முறையாக இணைய இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

- தீரன்

படக்குழுவினரைக் கண்கலங்க வைத்த கீர்த்தி சுரேஷ்

2 நிமிட வாசிப்பு

படக்குழுவினரைக் கண்கலங்க வைத்த கீர்த்தி சுரேஷ்

மத மாற்ற விழிப்புணர்வு குறித்து பேசும் ‘ருத்ர தாண்டவம்’!

23 நிமிட வாசிப்பு

மத மாற்ற விழிப்புணர்வு குறித்து பேசும் ‘ருத்ர தாண்டவம்’!

ஃப்ளைட்டில் ஃபைல்: அப்டேட் குமாரு

4 நிமிட வாசிப்பு

ஃப்ளைட்டில் ஃபைல்: அப்டேட் குமாரு

வெள்ளி 13 ஆக 2021