மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 13 ஆக 2021

பிரேமம் இயக்குநரின் அடுத்த பட ஹீரோ!

பிரேமம் இயக்குநரின் அடுத்த பட ஹீரோ!

அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய இரண்டு படங்களுமே செம ஹிட். ஒன்று, நிவின்பாலி நடிப்பில் தமிழ் & தெலுங்கில் வெளியான நேரம். மற்றொன்று, நிவின்பாலி, சாய்பல்லவி நடிப்பில் வெளியான ‘பிரேமம்’. குறிப்பாக, பிரேமம் படம் மலையாளத்தைத் தாண்டி தமிழ் ரசிகர்களும் கொண்டாடித்தீர்த்தனர்.

ஐந்தாறு வருட இடைவெளிக்குப் பிறகு, அல்போன்ஸ் புத்திரனின் அடுத்தப் படம் குறித்த அறிவிப்பு லேட்டஸ்டாக வெளியானது. ஃபகத் ஃபாசில் மற்றும் நயன்தாரா நடிக்க அல்போன்ஸ் இயக்க இருக்கும் படத்தின் பெயர் ‘பாட்டு’ என அறிவிக்கப்பட்டது. படத்தை இயக்குவதோடு, இசையமைப்பையும் மேற்கொள்கிறார் அல்போன்ஸ்.

பாட்டு படத்தில் மொத்தமாக 11 பாடல்களெனவும், மியூசிக்கல் படமாக இருக்கும் எனவும் சொல்லப்பட்டது. ஆனால், அறிவிப்பு வெளியாகி நீண்ட நாட்களாகிவிட்ட நிலையில், படம் இன்னும் துவங்கவில்லை.

மலையாளம், தெலுங்கு, தமிழ் என பல மொழிகளில் படங்களை கமிட் செய்துவைத்துவிட்டு செம பிஸியாக இருக்கிறார் ஃபகத். இந்த வருடம் ஃபகத் நடிப்பில் இருள், ஜோஜி, மாலிக் படங்கள் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்து, மலையாளத்தில் ‘மலையன்குஞ்சு’, தமிழில் கமலுடன் விக்ரம், தெலுங்கில் அல்லு அர்ஜூனுடன் புஷ்பா படங்களில் நடித்துவருகிறார். இன்னும் சில படங்களும் லைன் அப்பில் இருக்கிறது.

அதுபோல, நயன்தாரா நடிப்பில் நெற்றிக்கண் படம் வெளியாகிவிட்டது. ரஜினியுடன் அண்ணாத்த, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. அதோடு, இரண்டு பெரிய தயாரிப்பு நிறுவனங்களுக்கு தலா இரண்டு படங்களென தேதி ஒதுக்கியிருக்கிறார்.

ஆக, ஃபகத்தும், நயனும் செம பிஸியாக இருப்பதால் அல்ஃபோன்ஸ் புத்திரனின் பாட்டு துவங்குவதில் சிக்கல் நிலவுகிறது. அதனால், பாட்டு கதைக்கு முன்னரே தயார் செய்துவைத்திருந்த இன்னொரு கதையை முதலில் படமாக்க திட்டமிட்டிருக்காராம் அல்ஃபோன்ஸ். அந்தப் படத்தில் நாயகனாக ப்ரித்விராஜ் ஒப்பந்தமாகியிருக்கிறார். அதோடு, படத்தைத் தயாரிக்கவும் முன்வந்திருக்கிறார். விரைவிலேயே இந்தப் படத்தின் ஷூட்டிங் துவங்க இருக்கிறது.

ப்ரித்விராஜ் நடிப்பில் கோல்டு கேஸ், குருதி படங்கள் ஓடிடியில் சமீபத்தில் வெளியாகின. அதோடு, ஜன கன மன, அந்தாதூன் மலையாள ரீமேக், கடுவா, ஆடுஜீவிதம் படங்களும், இயக்குநராக ப்ரோ டேடி & லூசிஃபர் 2 படங்களும் லிஸ்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

-ஆதினி

அஜித்குமார் கேட்ட ஆலோசனை!

2 நிமிட வாசிப்பு

அஜித்குமார் கேட்ட ஆலோசனை!

வெற்றியை பதிவு செய்த கோடியில் ஒருவன்!

4 நிமிட வாசிப்பு

வெற்றியை பதிவு செய்த கோடியில் ஒருவன்!

பிக்பாஸ் ஒளிபரப்பு தேதிகள் அறிவிப்பு!

5 நிமிட வாசிப்பு

பிக்பாஸ்  ஒளிபரப்பு தேதிகள் அறிவிப்பு!

வெள்ளி 13 ஆக 2021