மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 13 ஆக 2021

சிவகார்த்திகேயன் பட தலைப்பாகும் ரஜினி பட டயலாக்!

சிவகார்த்திகேயன் பட தலைப்பாகும் ரஜினி பட டயலாக்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் மூன்று படங்கள் தயாராகிவருகிறது. ஒன்று, நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ப்ரியங்கா அருள்மோகன், வினய் நடிப்பில் ‘டாக்டர்’. இரண்டாவது, ‘இன்று நேற்று நாளை’ படத்தின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல்ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘அயலான்’. மூன்றாவது, புதுமுக இயக்குநர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ப்ரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் டான்.

இந்த மூன்று படங்களில் டாக்டர் ரிலீஸூக்குத் தயாராகிவிட்டது. ஓடிடி ரிலீஸா அல்லது திரையரங்க ரிலீஸா என்பது முடிவாகவில்லை. தியேட்டர் திறந்துவிடும் நம்பிக்கையில் டாக்டர் வெயிட்டிங்கில் இருக்கிறது. அயலான் ஷூட்டிங் முடிந்துவிட்டது. எடிட்டிங், சிஜி உள்ளிட்ட பணிகள் போய்க் கொண்டிருக்கிறது. அதுபோல, டான் ஷூட்டிங் கோவை சுற்றியுள்ள மாவட்டங்களில் போய்க் கொண்டிருக்கிறது. எப்படியும், ஒன்றிரண்டு மாதங்களில் ஷூட்டிங் முடிந்துவிடும்.

இந்நிலையில், சிவகார்த்திகேயனின் அடுத்தப் படத்தை, அட்லீயின் உதவியாளராக இருந்த அசோக் என்பவர் இயக்க இருக்கிறார். கூடுதலாக, இந்தப் படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் துவங்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது. கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்க இருக்கிறது. தற்பொழுது, இந்தப் படத்துக்கான டைட்டில் முடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது.

பொதுவாக, ஒரு படத்தின் டைட்டில் என்பது எளிமையாக மக்களிடம் ரீச் ஆக வேண்டும். அதற்கு, பெரும்பாலும் சினிமா பாடல் வரிகள், வசனங்களை இயக்குநர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். அப்படி, சிவகார்த்திகேயன் படத்தில் ரஜினியின் பிரபல வசனத்திலிருந்து பெயரை பிடித்திருக்கிறார்கள்.

ரஜினி நடித்து வெளியான சிவாஜி படத்தில் இடம்பெறும் வசனத்திலிருந்து, ‘சிங்கப்பாதை’ எனும் பெயரை சிவகார்த்திகேயன் பட டைட்டிலாக உறுதி செய்திருக்கிறார்களாம். விரைவிலேயே, படம் குறித்த கூடுதல் தகவல் வெளியாகும்.

-ஆதினி

யோகிபாபுவுக்கு நன்றி சொன்ன விவேக் மகள்!

2 நிமிட வாசிப்பு

யோகிபாபுவுக்கு நன்றி சொன்ன விவேக் மகள்!

ஐபிஎல்: கோலி அணியை வீழ்த்திய டோனி அணி!

5 நிமிட வாசிப்பு

ஐபிஎல்: கோலி அணியை வீழ்த்திய டோனி அணி!

ஒன்றிய அரசுக்கு பயப்படும் விஜய்: தயாரிப்பாளர் கே.ராஜன்

3 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசுக்கு பயப்படும் விஜய்: தயாரிப்பாளர் கே.ராஜன்

வெள்ளி 13 ஆக 2021