மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 13 ஆக 2021

சூர்யா படத்தால் தாமதமாகும் கமலின் ’விக்ரம்’ ஷூட்டிங் !

சூர்யா படத்தால் தாமதமாகும் கமலின் ’விக்ரம்’ ஷூட்டிங் !

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையில், சத்யன் சூரியன் ஒளிப்பதிவில் உருவாகிவரும் படம் விக்ரம். இப்படத்தின் ஷூட்டிங்கை வருகிற ஆக்ஸ்ட் 20ஆம் தேதி காரைக்குடியில் துவங்க திட்டமிட்டிருக்கிறார் கமல். ஆனால், சொன்ன தேதியில் படப்பிடிப்பைத் துவங்குவதில் சிக்கல் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆகஸ்ட் 22-க்கு மேல் தான் படப்பிடிப்பைத் துவங்க முடியும் என்கிறார்கள்.

விக்ரம் படத்தின் ஷூட்டிங் துவங்குவதில் தாமதம் ஏற்பட சூர்யாவின் படம் காரணமென்றால் நம்புவீர்களா? நம்பவில்லையென்றாலும் அதுதான் நெசம்.

சூர்யாவின் 40-வது படத்தை பாண்டிராஜ் இயக்கிவருகிறார். சூர்யாவுக்கு நாயகியாக ப்ரியங்கா மோகன் நடிக்கிறார். கிராமப் பின்புலம் கொண்ட ஆக்‌ஷன் கதையாக படம் உருவாகிவருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது நடந்துவருகிறது. இந்தப் படத்துக்கு ‘எதற்கும் துணிந்தவன்’ என டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்துக்கான ஷூட்டிங் காரைக்குடியில் நடந்துவருகிறது.

விக்ரம் படத்தின் ஷூட்டிங் துவங்க வேண்டிய அதே ஏரியாவில் தான், சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ ஷூட்டிங் போய்க் கொண்டிருக்காம். கொரோனா அச்சுறுத்தல் நிலவுவதால், ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் இரண்டு படங்களுக்கு ஷூட்டிங்கிற்கு அனுமதி கிடைக்காது என்றே தெரிகிறது. ஆக, சூர்யா படத்தின் படப்பிடிப்பு முடியும் வரை விக்ரம் படக்குழு காத்திருக்க வேண்டுமென்கிறார்கள்.

சூர்யா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிந்து காரைக்குடியை விட்டு வெளியேறியதும், கமலின் விக்ரம் ஷூட்டிங்கிற்கு அனுமதி கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆக, கமல் திட்டமிட்டபடி ஷூட்டிங் துவங்காது என்றே சொல்லப்படுகிறது.

கமல்ஹாசனுடன் விஜய்சேதுபதி, ஃபகத்பாசில், நரேன், அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் ஓய்வுப் பெற்ற போலீஸ் அதிகாரியாக கமல் நடிக்கிறார். அதோடு, பார்வை சவால் கொண்ட கேரக்டரில் வருவார் என்று சொல்லப்படுகிறது. விஞ்ஞானி கதாபாத்திரத்தில் ஃபகத்பாசிலும், டெட்லி வில்லனாக விஜய்சேதுபதியும், கமலின் மகனாக காளிதாஸ் நடிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

விக்ரம் படத்துக்கான லுக் டெஸ்ட் ஷூட் சமீபத்தில் நடந்தது. இந்த ஷூட்டிங்கில் விஜய்சேதுபதி , ஃபகத் ஆகியோர் கலந்துகொண்டனர். அந்தப் புகைப்படங்களும் கூட இணையத்தில் வைரலானது. அதுமட்டுமில்லாமல், மாஸ்டர் பவானி ரோல் மாதிரி, இந்தப் படத்துலயும் படுபயங்கர வில்லனா விஜய்சேதுபதி நடிக்கிறார் என சொல்லப்படுகிறது. விக்ரம் ஷுட்டிங்கே தற்பொழுது தான் கிக் ஸ்டார்க் ஆகிறது. அதற்குள், இந்தி ரீமேக் உரிமைக்கு பெரும் விலை பேசப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

-தீரன்

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

6 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

முதல்வர் வீட்டின் முன் உண்ணாவிரதம் இருப்பேன்: டி.ராஜேந்தர்

8 நிமிட வாசிப்பு

முதல்வர் வீட்டின் முன் உண்ணாவிரதம் இருப்பேன்: டி.ராஜேந்தர்

வெள்ளி 13 ஆக 2021