மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 13 ஆக 2021

இரண்டாவது டெஸ்ட் - முதல் நாள் ஆட்டம்: இந்தியா 276/3

இரண்டாவது டெஸ்ட் - முதல் நாள் ஆட்டம்: இந்தியா 276/3

இங்கிலாந்தில் நடைபெறும் இரண்டாவது டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 276 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று (ஆகஸ்ட் 12) தொடங்கியது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்தியாவின் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாகக் களம் இறங்கினர். இந்தியா 18.4 ஓவரில் 46 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டு அத்துடன் உணவு இடைவேளை விடப்பட்டது.

பொறுப்புடன் ஆடிய ரோகித் சர்மா அரைசதம் அடித்தார். கே.எல்.ராகுல் நிதானமாக விளையாடினார். அணியின் ஸ்கோர் 126 ரன்னாக இருக்கும்போது ரோகித் சர்மா 83 ரன்கள் எடுத்து அவுட்டானார். இந்த ஜோடி 126 ரன்கள் சேர்த்தது.

அடுத்து இறங்கிய புஜாரா 9 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து இறங்கிய கேப்டன் விராட் கோலி நிதானமாக ஆடினார். மறுமுனையில் நின்று ஆடிய கே.எல்.ராகுல் சதமடித்து அசத்தினார். மூன்றாவது விக்கெட்டுக்கு கே.எல்.ராகுல் - விராட் கோலி ஜோடி 117 ரன்களைச் சேர்த்தது. பின்னர் விராட் கோலி 42 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ரஹானே களமிறங்கி ஒரு ரன் எடுத்துள்ளார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 90 ஓவரில் 3 விக்கெட்டு இழப்புக்கு 276 ரன்களை எடுத்துள்ளது. கே.எல்.ராகுல் 127 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 2 விக்கெட்டுகள், ராபின்சன் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

-ராஜ்

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

6 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

3 நிமிட வாசிப்பு

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

வாகா எல்லையில் நடிகர் அஜித்

2 நிமிட வாசிப்பு

வாகா எல்லையில் நடிகர் அஜித்

வெள்ளி 13 ஆக 2021