மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 12 ஆக 2021

தனுஷுக்காக சேகர் கம்முலா வைத்திருக்கும் கதை இதுவா?

தனுஷுக்காக சேகர் கம்முலா வைத்திருக்கும் கதை இதுவா?

ஹாலிவுட் திரைப்படமான க்ரே மேன் படத்தை முடித்துவிட்ட தனுஷ், கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘மாறன்’ படத்தில் நடித்துவருகிறார்.

இந்தப் படத்துக்குப் பிறகு, மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம், செல்வராகவன் இயக்கத்தில் ராயன் படங்கள் உருவாக இருக்கின்றன. இவ்விரு படங்களையும் முடித்த கையோடு, தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் பெரும் பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் நடிக்க இருக்கிறார் தனுஷ்.

தமிழ் திரையுலகில் பெறும் சம்பளத்தைவிட அதிகமான சம்பளத்தில் தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் தனுஷ். இந்தப் படமானது தமிழ் மற்றும் தெலுங்கு என பைலிக்குவலில் உருவாக இருக்கிறது. அதோடு கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் டப் செய்து வெளியிடவும் திட்டம்.

இந்தப் படத்தின் முதல்கட்டப் பணிகள் தற்போது நடந்துவருகிறது. இந்த நிலையில், படத்தின் கதை எப்படி இருக்கப் போகிறது என்பது குறித்த தகவல் தெரியவந்துள்ளது. மதராசப்பட்டினம் மாதிரியான Period திரைப்படமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஓல்டு மெட்ராஸ் காலகட்டத்தில் செட் ஒன்றை தயார் செய்ய திட்டமாம். அதன் மூலம், பழைய மெட்ராஸ் காலகட்டத்தில் கதை நகர இருக்காம். அதோடு, தனுஷுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிப்பார் என்றே சொல்லப்படுகிறது.

படத்துக்கான ப்ரீ புரொடக்‌ஷன் பணிகளே பெரிய அளவில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதனால், படப்பிடிப்பையும் நிதானமாகத் தொடங்கவே திட்டமாம்.

தற்போது, மாறன் படத்தின் படப்பிடிப்புக்காக ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இருக்கிறார் தனுஷ். அங்கு இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.

- ஆதினி

திறந்தவெளியில் ஜெய்பீம் படத்தைக் கண்டுகளித்த மக்கள்!

3 நிமிட வாசிப்பு

திறந்தவெளியில் ஜெய்பீம் படத்தைக் கண்டுகளித்த மக்கள்!

பிரமாண்டமாக நடக்கும் கத்ரினா கைப் திருமணம்!

2 நிமிட வாசிப்பு

பிரமாண்டமாக நடக்கும் கத்ரினா கைப் திருமணம்!

கபில் தேவ் உரிமையைப் பெற்ற பிரித்வி ராஜ்

2 நிமிட வாசிப்பு

கபில் தேவ் உரிமையைப் பெற்ற பிரித்வி ராஜ்

வியாழன் 12 ஆக 2021