மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 12 ஆக 2021

ரிஸ்க் எடுக்கும் கார்த்திக் நரேன்: திட்டம் தவறாகுமா?

ரிஸ்க் எடுக்கும் கார்த்திக் நரேன்: திட்டம் தவறாகுமா?

மணிரத்னம் மற்றும் ஜெயந்திரா இணைந்து தயாரிக்க நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியிருக்கும் ஆந்தாலஜி ‘நவரசா’. கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி வெளியானது.

இந்த ஆந்தாலஜியின் ஸ்பெஷலே நவரச உணர்வுகளை மையமாகக் கொண்டு ஒன்பது கதைகள் உருவாக்கப்பட்டிருப்பதுதான். அந்த ஒன்பது கதைகளை ஒன்பது இயக்குநர்கள் இயக்கியிருக்கிறார்கள்.

விஜய் சேதுபதி, சூர்யா, அதர்வா, கெளதம் மேனன், அரவிந்த்சாமி, டெல்லி கணேஷ், ரோகிணி, அதிதி பாலன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த ஒன்பது கதைகளில் ஒன்று ‘ப்ராஜெக்ட் அக்னி’.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த்சாமி மற்றும் பிரசன்னா நடிப்பில் உருவான கதைதான் ‘ப்ராஜெக்ட் அக்னி’. சயின்ஸ் பிக்‌ஷன் ஜானரில் படம் இருக்கும். கூடுதல் நடிகர்களாக, சாய் சித்தார்த், பூர்ணா இருவரும் இடம்பெற்றிருந்தார்கள்.

இந்தப் படத்துக்கு ஓரளவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இருப்பினும் பெரும்பாலானவர்கள் எதிர்மறை விமர்சனங்களை கூறியும் வருகின்றனர். படம் முழுக்க ஒரே அறைக்குள் பேசிக் கொண்டே இருக்கிறார்கள் என விமர்சிக்கப்பட்டுவருகிறது. அதோடு, ஹாலிவுட் பட தாக்கம் முழுமையாக நிறைந்திருக்கிறது. இந்த நிலையில், இப்படத்தை முழுநீள படமாக்கும் திட்டம் இருக்கிறதா என பலரும் கேட்டு வருகிறார்கள். அதற்கு, 'ப்ராஜெக்ட் அக்னி' படத்துக்கு மாபெரும் வரவேற்பை கொடுத்த பார்வையாளர்களுக்கும், ஊடகங்களுக்கும் மனமார்ந்த நன்றி. விஷ்ணு, கிருஷ்ணா, கல்கி இவர்களின் பயணம் இப்போதுதான் துவங்கியிருக்கிறது’ என சூசகமாக ஒரு ட்விட் செய்திருக்கிறார் கார்த்திக் நரேன்.

சினிமா மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக தயாரித்து, இயக்கி தமிழ் சினிமாவுக்கு ‘துருவங்கள் பதினாறு’ படம் மூலம் அறிமுகமானார் கார்த்திக் நரேன். இவரின் இரண்டாவது படமான ‘நரகாசூரன்’ வெளியாக முடியாத நிலையில் பொருளாதார சிக்கலில் இருக்கிறது. இவரின் மூன்றாவது படம் ‘மாஃபியா சேப்டர் 01’. அருண்விஜய் இரண்டு ரோல்களில் நடிக்க வெளியான கேங்க்ஸ்டர் படமிது. திரையரங்கில் வெளியாகி படுதோல்வியைச் சந்தித்தது. அதனால், மாஃபியா சேப்டர் 02 இல்லை என்றே உறுதியாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், நவரசாவில் இடம்பெற்ற ப்ராஜெக்ட் அக்னியும் பெரியளவில் கவனம் ஈர்க்கவில்லை.

இந்நிலையில், ப்ராஜெக்ட் அக்னி கதையை முழுநீள படமாக்கும் திட்டத்தில் இருக்கிறாராம் கார்த்திக் நரேன். ஏற்கெனவே விமர்சனங்கள் நிறைந்த இப்படத்தை மீண்டும் கையில் எடுப்பது சரியா என்பது தெரியவில்லை. அதோடு, அவரின் திட்டம் தவறாக முடியவும் வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. தவிர, தனுஷ் நடிப்பில் இவர் இயக்க உருவாகிவரும் ‘மாறன்’ வெற்றிமட்டுமே இவருக்கான அடுத்தப் படத்தைத் தீர்மானிக்கும்.

தமிழ் சினிமாவில் ராசியும், முந்தைய பட ஹிட்டும் சென்டிமென்டலாகப் பார்க்கப்படும். அப்படியிருக்கையில், மாஃபியா, ப்ராஜெக்ட் அக்னியும் பெரியளவில் பேசப்படவில்லை. தனுஷின் மாறன் படமே அக்னியை டேக் ஆஃப் செய்யுமா, தண்ணீர் ஊற்றி அணைக்குமா என்பதை முடிவு செய்யும்.

- தீரன்

யோகிபாபுவுக்கு நன்றி சொன்ன விவேக் மகள்!

2 நிமிட வாசிப்பு

யோகிபாபுவுக்கு நன்றி சொன்ன விவேக் மகள்!

ஐபிஎல்: கோலி அணியை வீழ்த்திய டோனி அணி!

5 நிமிட வாசிப்பு

ஐபிஎல்: கோலி அணியை வீழ்த்திய டோனி அணி!

ஒன்றிய அரசுக்கு பயப்படும் விஜய்: தயாரிப்பாளர் கே.ராஜன்

3 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசுக்கு பயப்படும் விஜய்: தயாரிப்பாளர் கே.ராஜன்

வியாழன் 12 ஆக 2021