மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 12 ஆக 2021

கொம்பன் ஹீரோவை தட்டி எழுப்பும் கார்த்தி

கொம்பன் ஹீரோவை தட்டி எழுப்பும் கார்த்தி

கார்த்திக்கு இந்த வருட ரிலீஸாக சுல்தான் வெளியானது. ரெமோ இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இயக்கியிருந்த இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். திரையரங்கில் வெளியான இந்தப் படம் ஓரளவுக்கு சுமாரான வரவேற்பைப் பெற்றது.

தற்பொழுது, கார்த்தி நடிப்பில் இரண்டு படங்கள் இருக்கிறது. ஒன்று, பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சர்தார். ஓல்டு ஏஜ் கெட்டப்பில் இந்தப் படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆல்மோஸ்ட் முடிந்துவிட்டது.

இரண்டாவது, மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் பிரம்மாண்டப் படைப்பான பொன்னியின் செல்வன். இதில், வந்தியதேவனாக கார்த்தி நடித்துவருகிறார். இன்னும், சில நாட்கள் படப்பிடிப்பு முடிந்தால் முதல் பாகத்துக்கான முழு ஷூட்டிங்கும் முடிந்துவிடும். அதற்கான பணிகளில் கவனம் செலுத்திவருகிறார் கார்த்தி.

இவ்விரு படங்களையும் தொடர்ந்து, கார்த்தியின் அடுத்தப் படத்தை முத்தையா இயக்குவார் என்று சொல்லப்படுகிறது. ஏற்கெனவே, முத்தையா இயக்கத்தில் கொம்பன் படத்தில் நடித்திருந்தார். ரூரல் கதையான இப்படம் செம ஹிட்டானது. அதே ஸ்டைலில் மீண்டும் இந்த கூட்டணி இணைந்திருக்காம். குறைந்த பட்ஜெட்டில் குறைந்த நாட்களில் எடுத்து முடிக்கும் திட்டத்தில் படக்குழு இருக்காம்.

முதல்கட்டமாக, பொன்னியின் செல்வன் ஷூட்டிங்கை முடிக்கவுள்ளார் கார்த்தி. இப்படத்துக்காக அதிக முடிகளை வளர்த்திருப்பதால், பொன்னியின் செல்வன் முடித்துவிட்டு முத்தையா படத்தைத் துவங்குகிறார். இதற்கு நடுவே சர்தார் படமும் முழுமையாக முடிந்துவிடும் என்று சொல்லப்படுகிறது.

குட்டிப்புலி, கொம்பன், மருது, கொடிவீரன், தேவராட்டம் மற்றும் புலிக்குத்திப் பாண்டி என முத்தையாவின் அனைத்துப் படங்களுமே வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றாலும் கிராமத்துக் கதைக்குள் பழமைவாத சிந்தனையையும், சாதிய தாக்கமும் அதிகமாக இருக்கும். அப்படியான எந்த சிக்கலும் இல்லாத கதையாக இந்த முறை கதையைக் கார்த்தி தேர்ந்தெடுத்திருப்பார் என்று நம்புவோம்.

- ஆதினி

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

2 நிமிட வாசிப்பு

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

மிஷ்கின் இயக்கத்தில் நடித்தது ஏன்?: விஜய்சேதுபதி

3 நிமிட வாசிப்பு

மிஷ்கின் இயக்கத்தில் நடித்தது ஏன்?: விஜய்சேதுபதி

வெங்கட்பிரபுவுடன் ஜோடி சேர்ந்த சினேகா

2 நிமிட வாசிப்பு

வெங்கட்பிரபுவுடன் ஜோடி சேர்ந்த சினேகா

வியாழன் 12 ஆக 2021