மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 12 ஆக 2021

ஜோதிகா திமுகவில் சேருகிறாரா?: அப்டேட் குமாரு

ஜோதிகா திமுகவில் சேருகிறாரா?: அப்டேட் குமாரு

டீ குடிச்சிக்கிட்டே இருக்கும்போது பக்கத்துல பேப்பர் படிச்சுக்கிட்டே இருந்த தம்பி ஒருத்தன், ‘என்னண்ணே ஜோதிகா திமுகவுல சேர்றாரா?’னு கேட்டான். கேள்வி கேட்டப்ப அவன் மூஞ்சி ரொம்ப சீரியசா இருந்ததால நானும் கொஞ்சம் நம்பி, ‘என்னப்பா சொல்றே... அவங்க கணவர் சூரியா வேற பல சமூக பணிகளை செஞ்சுக்கிட்டிருக்காரே’னு பதில் சொன்னேன். ஆமாண்ணே...உடன்பிறப்பேனு ஒரு படத்துல நடிக்கிறாங்களாமே...கலைஞர்தானே உடன்பிறப்பேனு சொல்லுவாருனு கேட்டுட்டு பேப்பரை மடிச்சு வைச்சிட்டான்.

நீங்க அப்டேட் பாருங்க

amudu

மத்திய அரசின் கீழ் இயங்கும் 171 பொதுத்துறை நிறுவனங்கள் லாபத்தில் இயங்குகின்றன. -மத்திய நிதி இணை அமைச்சர் பகவத் கிஷன்ராவ் காரத்.

இன்னுமா இத்தனை பொதுத்துறை நிறுவனங்களை விட்டு வச்சி இருக்கீங்க.

ரஹீம் கஸ்ஸாலி

நாட்டின் பொருளாதாரம் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது – பிரதமர் மோடி

எந்த நாட்டின் பொருளாதாரம்?

மயக்குநன்

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது சுமத்தப்படும் பொய் குற்றச்சாட்டுகளை சட்டரீதியாக சந்திக்கத் தயார்!- ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அறிவிப்பு.

சட்டரீதியான விசாரணை முடிஞ்ச பிறகுதானே அது பொய் குற்றச்சாட்டா, இல்லையான்னே தெரியவரும்..?!

கோழியின் கிறுக்கல்!

படிக்கும் காலத்தில் முக்கியம், மிக முக்கியம் என்று நான் கோடிட்டுப் படித்து எந்த பதிலும் என் வாழ்க்கைக்கு உதவவில்லை!!

ℳ𝐬𝐝✩இதயவன்

கடைசியாக ஒரு தடவை ங்கிற வார்த்தை தொடரும் தவறுகளுக்கு எழுதப்படும் முன்னுரை என்று அறிக..!!!

balebalu

பார்லி.,க்கு புது கட்டடம் ஓராண்டுக்குள் தயாராகி விடும்: லோக் சபா சபாநாயகர் -

ஓஹோ ! எல்லா செங்கல்லும் அங்கே போயிடுச்சு போல

PrabuG

பீகாரில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டக்கோரி செங்கல் சேகரிக்கும் போராட்டம்.

விடுப்பா விடுப்பா.. ரைம்ஸ்ல ஜிங்கிளும், எய்ம்ஸ்ல செங்கல்லும் சகஜம்தான.

ச ப் பா ணி

கையறு நிலை என்பது பவர் கட்டான பின்..

பவர் பேங்கிலும் சார்ஜ் இல்லாமல் இருப்பதுவே

மயக்குநன்

திமுக வெளியிட்ட வெள்ளை அறிக்கை ஒன்றும் இல்லாமல் போய்விட்டது!- பொள்ளாச்சி ஜெயராமன்.

அதனாலதான் அதுக்குப் பேரு 'வெள்ளை' அறிக்கை பாஸ்..!

கோழியின் கிறுக்கல்!!

குருவி சேர்க்கிற மாதிரி சேர்த்து,

வெள்ளத்தில் இழக்கிற மாதிரி இழக்கிறவனுக்கு பெயர் தான் நடுத்தர வர்க்கம்!!

-லாக் ஆஃப்

அஜித்குமார் கேட்ட ஆலோசனை!

2 நிமிட வாசிப்பு

அஜித்குமார் கேட்ட ஆலோசனை!

வெற்றியை பதிவு செய்த கோடியில் ஒருவன்!

4 நிமிட வாசிப்பு

வெற்றியை பதிவு செய்த கோடியில் ஒருவன்!

பிக்பாஸ் ஒளிபரப்பு தேதிகள் அறிவிப்பு!

5 நிமிட வாசிப்பு

பிக்பாஸ்  ஒளிபரப்பு தேதிகள் அறிவிப்பு!

வியாழன் 12 ஆக 2021