மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 12 ஆக 2021

இந்தியா - இங்கிலாந்து இரண்டாவது டெஸ்ட்: இன்று ஆரம்பம்

இந்தியா - இங்கிலாந்து இரண்டாவது டெஸ்ட்: இன்று ஆரம்பம்

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று (ஆகஸ்ட் 12) இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்குத் தொடங்குகிறது.

இந்தப் போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியலில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் விலகியுள்ளார். காயம் காரணமாக ஷர்துல் தாகூர் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இடம்பெற மாட்டார் என இந்திய கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் மெதுவாக பந்து வீசியதாக இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு ஐசிசி 40 சதவிகிதம் சம்பளத்தை அபராதமாக விதித்துள்ளது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இரு அணிகளுக்கும் தலா 2 புள்ளிகளை ஐசிசி குறைத்துள்ளது.

முதல் டெஸ்டின் கடைசி நாள் ஆட்டத்தில் 9 விக்கெட்டுகள் மீதமிருக்க 157 ரன்களே தேவை என்பதால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பே அதிகமாக இருந்தது. ஆனால், மழையின் குறிக்கீடு இந்தியாவின் வெற்றியைத் தகர்த்தது.

இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்துள்ள நிலையில் இன்று தொடங்க உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

-ராஜ்

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

2 நிமிட வாசிப்பு

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

மிஷ்கின் இயக்கத்தில் நடித்தது ஏன்?: விஜய்சேதுபதி

3 நிமிட வாசிப்பு

மிஷ்கின் இயக்கத்தில் நடித்தது ஏன்?: விஜய்சேதுபதி

வெங்கட்பிரபுவுடன் ஜோடி சேர்ந்த சினேகா

2 நிமிட வாசிப்பு

வெங்கட்பிரபுவுடன் ஜோடி சேர்ந்த சினேகா

வியாழன் 12 ஆக 2021