மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 12 ஆக 2021

ரைட்ஸ்: களத்தில் குதித்த கலைஞர் டிவி!

ரைட்ஸ்: களத்தில் குதித்த கலைஞர் டிவி!

தமிழ்த் திரைப்படங்களுக்கு தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை வியாபாரம் என்பது முக்கியமான ஒன்று. படத்துக்குச் செலவாகும் தொகையில் பெரும்பங்கு தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையில் கிடைக்கும் என்பது பெரிய கதாநாயகர்களை வைத்துப் படமெடுப்பவர்களின் கணக்கு.

தமிழில் சன் தொலைக்காட்சி, விஜய் தொலைக்காட்சி, ஜீ தமிழ் தொலைக்காட்சி,கலைஞர் தொலைக்காட்சி,ஜெயா தொலைக்காட்சி ஆகிய நிறுவனங்கள் தமிழ் படங்களின் தொலைக்காட்சி உரிமைகளை விலைக்கு வாங்கிவந்தன.

கடந்த பல ஆண்டுகளாக கலைஞர் தொலைக்காட்சியும் ஜெயா தொலைக்காட்சியும் புதுப்படங்கள் வாங்குவதில்லை. அதனால் திரைத்துறையினரின் வியாபார எல்லை குறைந்ததுடன் எதிர்பார்த்த விலையும் கிடைக்கவில்லை

இதனால், விஷால் நடித்துள்ள சக்ரா ஆர்யா நடித்துள்ள மகாமுனி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை விற்பனை ஆகாமல் இருக்கின்றன.

இப்போது திமுக ஆட்சி அமைந்ததும் கலைஞர் தொலைக்காட்சி புதிய படங்களை வாங்க முடிவு செய்திருக்கிறது

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கலைஞர் தொலைக்காட்சி ஆகஸ்ட் 15 அன்று அன்பிற்கினியாள் படத்தை ஒளிபரப்பவிருக்கிறார்கள்.

அதோடு பல புதிய படங்களை வாங்கவும் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளனர் அவற்றில் ஓடிடியில் வெளியான சார்பட்டா பரம்பரையும் ஒன்று.

இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைக்காக ஐந்துகோடி கேட்டுக்கொண்டிருந்த படக்குழுவினர் படத்துக்கு நல்ல வரவேற்பு என்றதும் விலையை எட்டுக் கோடியாக உயர்த்திவிட்டார்களாம். அதனால் விஜய் மற்றும் கலர்ஸ் தொலைக்காட்சி நிறுவனங்கள் படத்தை வாங்க ஆர்வம் காட்டவில்லை

இந்த சூழலை தனக்கு சாதகமாக்கிகொண்ட கலைஞர் தொலைக்காட்சி அப்படத்தின் ஒளிபரப்பு உரிமையை சுமார் ஆறுகோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளனர். இதனால் தமிழ் படங்களின் தொலைக்காட்சி உரிமை வியாபாரம் சூடு பிடித்துள்ள அதேநேரம், "சிறுபட்ஜெட் படங்கள் வெற்றிபெற்றால் மட்டுமே வாங்கும் போக்கு இன்று வரை மாறவில்லை. இந்த நிலை மாற வேண்டும். சிறு பட்ஜெட் படங்களின் தொலைக்காட்சி உரிமைகளை எல்லா தொலைக்காட்சிகளும் பாரபட்சம் இன்றி வாங்க வேண்டும்" என்கிற குரல்கள் தயாரிப்பாளர்கள் மத்தியில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

-இராமானுஜம்

யோகிபாபுவுக்கு நன்றி சொன்ன விவேக் மகள்!

2 நிமிட வாசிப்பு

யோகிபாபுவுக்கு நன்றி சொன்ன விவேக் மகள்!

ஐபிஎல்: கோலி அணியை வீழ்த்திய டோனி அணி!

5 நிமிட வாசிப்பு

ஐபிஎல்: கோலி அணியை வீழ்த்திய டோனி அணி!

ஒன்றிய அரசுக்கு பயப்படும் விஜய்: தயாரிப்பாளர் கே.ராஜன்

3 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசுக்கு பயப்படும் விஜய்: தயாரிப்பாளர் கே.ராஜன்

வியாழன் 12 ஆக 2021