மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 12 ஆக 2021

அரவிந்த்சாமியின் கனவை நிறைவேற்றிய மணிரத்னம்

அரவிந்த்சாமியின் கனவை நிறைவேற்றிய மணிரத்னம்

வெளிநாட்டில் வேலை கிடைத்து புறப்படுவதற்கு தயாரான அரவிந்த்சாமியை தளபதி படம் மூலம் கோடம்பாக்கத்துக்கு அழைத்து வந்தவர் இயக்குநர் மணிரத்னம். அதைத் தொடர்ந்து பம்பாய் படத்தில் தனி ஹீரோவாக நடிக்க வைத்தார். தற்போது, அவரது தயாரிப்பில் உருவான குறும்படத்தை இயக்கும் வாய்ப்பு அரவிந்த்சாமிக்கு கிடைத்துள்ளது.

நவரசா ஆந்தாலஜி படத்தில் ரவுத்திரம் என்ற குறும்படத்தை அரவிந்த்சாமி இயக்கி உள்ளார். தான் இயக்குநராக மாறியது எப்படி என்பது குறித்து வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் அரவிந்த்சாமி தெரிவித்திருப்பதாவது,

“90களின் ஆரம்பத்தில் இருந்தே இயக்கத்தின் மீது எனக்கு அதிக ஆர்வம் இருந்து வந்தது. மணி சார் நவரசா குறித்து என்னுடன் பேசியபோது நான் அதில் பங்கேற்க முடியுமா எனக் கேட்டார். நான் அவரிடம் இயக்குநராகவா அல்லது நடிகராகவா எனக் கேள்வி எழுப்பினேன்.

அது உன்னுடைய தேர்வுதான் என்று கூறிவிட்டார். இப்படித்தான் இயக்குநராக எனது பயணம் தொடங்கியது. எனது 30 வருட இயக்குநர் கனவு நிறைவேறியதில் மகிழ்ச்சி.

ஒரு படைப்பை உருவாக்குவதில் எதைப் பற்றியும் எந்த சந்தேகமோ, தயக்கமோ, என்னிடம் சுத்தமாக இல்லை. பல ஆண்டுகளாக நான் பல திறமையான இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் பணிபுரிந்ததுதான் அதற்கு காரணம். அவர்கள்தான் என் வழிகாட்டி.

ஏதாவது செய்ய உங்களுக்கு விருப்பம் இருந்தால், நீங்கள் எப்போதும் அது குறித்து, கவனித்து கற்றுக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும் மற்றும் அதற்கான வாய்ப்பு வரும்போது, தயங்காமல் ஏற்றுக்கொண்டு செய்து பார்க்க வேண்டும். அந்த வகையில் இப்படைப்பை உருவாக்கியது மிக மகிழ்ச்சியாக இருந்தது.

ஆந்தாலஜியில் கோபத்தை நான்தான் தேர்ந்தெடுத்தேன். அதற்கு காரணம் வழக்கத்தை மீறி ஏதாவது செய்ய, கோபம் ஏற்றதாக இருக்குமென்று நினைத்தேன். ஒரு ஐடியா என்னுள் தோன்றியது. கோபம் கிடைத்தால் அதை முன்வைத்து ஒரு கதையைக் கூறலாம் என்று முடிவு செய்தேன். அது நிறைவுபெற்று, இப்போது எனது படைப்புக்கு பாராட்டுகள் கிடைத்து வருவது, மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது" என்றார்.

-இராமானுஜம்

படக்குழுவினரைக் கண்கலங்க வைத்த கீர்த்தி சுரேஷ்

2 நிமிட வாசிப்பு

படக்குழுவினரைக் கண்கலங்க வைத்த கீர்த்தி சுரேஷ்

மத மாற்ற விழிப்புணர்வு குறித்து பேசும் ‘ருத்ர தாண்டவம்’!

23 நிமிட வாசிப்பு

மத மாற்ற விழிப்புணர்வு குறித்து பேசும் ‘ருத்ர தாண்டவம்’!

ஃப்ளைட்டில் ஃபைல்: அப்டேட் குமாரு

4 நிமிட வாசிப்பு

ஃப்ளைட்டில் ஃபைல்: அப்டேட் குமாரு

வியாழன் 12 ஆக 2021