மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 11 ஆக 2021

விஜய்சேதுபதியின் நட்புக்காக ஒரு நாள்!

விஜய்சேதுபதியின் நட்புக்காக ஒரு நாள்!

சினி துறையில் விஜய்சேதுபதி ஓய்வு இன்றி நடித்து வரும் கதாநாயகனாக உள்ளார். தமிழ் சினிமாவில் 2024ம் ஆண்டு வரை நடிப்பதற்கு படங்களை ஒப்புக்கொண்டு ஒப்பந்தம் செய்திருக்கும் நடிகர் விஜய்சேதுபதி மட்டுமே என சொல்லப்படுகிறது.

புதிதாக ஒப்பந்தம் செய்ய வருபவர்களிடம் கதை கேட்பதையும் தவிர்க்க தொடங்கி இருக்கிறார். இந்த நெருக்கடியான சூழ்நிலையிலும் நட்புக்காக நீண்டகால நண்பர் வேண்டுகோள் வைத்ததை நிறைவேற்றியிருக்கிறார் விஜய்சேதுபதி.

"அழகிய கண்ணே" படத்தின் இயக்குநர் விஜய்குமார். இவர் இயக்குநர் சீனு ராமசாமியின் தம்பி. விஜய்சேதுபதி கதாநாயகனாக அறிமுகமான படம் தென்மேற்கு பருவக்காற்று. இப்படத்தின் இயக்குநர் சீனுராமசாமி இயக்கிய அனைத்துப் படங்களிலும் இணை இயக்குநராக பணியாற்றிய விஜய்குமாருடன் தனது முதல் படத்தில் இருந்தே நெருங்கிய நட்புடன் இருந்து வந்துள்ளார்.

விஜய்சேதுபதி இப்போது விஜய்குமார் இயக்குநராக அறிமுகமாகும் அழகிய கண்ணே திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் ஒரு நாள் நடிக்க முடியுமா என விஜயகுமார் வேண்டுகோள் வைத்தவுடன் எந்தவித எதிர்கேள்வியும் கேட்காமல் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் விஜய்சேதுபதி. சொன்னது போலவே நெருக்கடியான நிலையிலும் ஒரு நாள் முழுக்க நடித்துக் கொடுத்துள்ளார் விஜய்சேதுபதி.

-இராமானுஜம்

விருதுகளை அள்ளிய அசுரன்!

2 நிமிட வாசிப்பு

விருதுகளை அள்ளிய அசுரன்!

கார்த்தி முடிவால் வட்டியில் சிக்கிய தயாரிப்பாளர்!

4 நிமிட வாசிப்பு

கார்த்தி முடிவால் வட்டியில் சிக்கிய தயாரிப்பாளர்!

ஐபிஎல்: மும்பையை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்!

6 நிமிட வாசிப்பு

ஐபிஎல்: மும்பையை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்!

புதன் 11 ஆக 2021