மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 11 ஆக 2021

அட்லீ - ஷாரூக் பட ஷூட்டிங் குறித்த முக்கிய தகவல்!

அட்லீ - ஷாரூக் பட ஷூட்டிங் குறித்த முக்கிய தகவல்!

ராஜா ராணி படம் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் அட்லீ. அடுத்தடுத்து தெறி, மெர்சல், பிகில் என விஜய்க்கு மூன்று பெரிய ஹிட் படங்களைக் கொடுத்தவருக்கு பலனாக, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கானை இயக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

தமிழ் திரையுலகின் இளம் இயக்குநர்கள் மீது பாலிவுட் நடிகர்களுக்கு எப்போதுமே ஒரு ஈர்ப்பு இருக்கும். அப்படி, அட்லீயை பாலிவுட் பக்கம் இழுத்தார் ஷாரூக். கடந்த இரண்டு ஆண்டுகளாக அட்லீ - ஷாரூக் கூட்டணி குறித்து தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கின்றன. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில், படம் டிராப் என்றெல்லாம் கூட வதந்திகள் நிலவியது.

இந்நிலையில், அட்லீ இயக்கும் ஷாரூக் படம் இந்த மாதம் படப்பிடிப்புத் துவங்க இருக்கிறதாம். கடந்த சில மாதங்களாக மும்பையில் முகாமிட்டிருக்கிறார் அட்லீ. படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் போய்க் கொண்டிருந்தது. அதன்படி, படப்பிடிப்பையும் லாக் செய்துவிட்டதாம் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லீஸ் நிறுவனம்.

முதல்கட்டமாக, மும்பையில் ஆகஸ்ட் மாத இறுதியில் படப்பிடிப்பு துவங்க திட்டம். அதன்பிறகு, அடுத்தடுத்து பல கட்டங்களில் படப்பிடிப்பு நடத்தவும் இருக்கிறார்கள். அதோடு, கூடுதல் தகவலாக வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும், மினி டீசர் ஒன்றும் வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது.

சமீபத்தில் ஷாரூக் கலந்துகொள்ள போட்டோ ஷூட் நடந்தது நினைவிருக்கலாம். அதைப் பயன்படுத்தி டீஸர் வீடியோ வெளியிட வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள்.

இரண்டு ரோல்களில் ஷாரூக் நடிக்கிறார். நாயகியாக நயன்தாரா ஒப்பந்தமாவார் எனவும், இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் இணைவார் என்றும் சொல்லப்படுகிறது.

சொன்ன பட்ஜெட்டுக்கு மேல் கொஞ்சம் செலவு இழுத்து விடுபவர் அட்லீ என்றாலும், இவரின் எந்தப் படமும் வியாபாரத்தில் சறுக்கியதில்லை. கலர்ஃபுல்லாக ஒரு மேஜிக் அட்லீ படத்தில் இருக்கும்.

தற்பொழுது, சித்தார் ஆனந்த் இயக்கத்தில் ‘பதான்’ படத்தில் நடித்துவருகிறார் ஷாரூக். இந்தப் படத்தை முடித்துவிட்ட நிலையில், அட்லீ இயக்க இருக்கும் படத்தில் எந்த தடையும் இருக்காது என்று சொல்லப்படுகிறது. அட்லீ படத்துக்குப் பிறகு, ராஜ்குமார் ஹிரானியின் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் ஷாரூக்.

- ஆதினி

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

அர்ஜுன் மீது 'மீ டூ 'புகார்: விரைவில் விசாரணை அறிக்கை!

2 நிமிட வாசிப்பு

அர்ஜுன் மீது 'மீ டூ 'புகார்:  விரைவில் விசாரணை அறிக்கை!

அஜித்துக்கு கைதட்டல் வாங்கிக்கொடுத்த சிவசங்கர்: கே.எஸ்.ரவிகுமார் ...

3 நிமிட வாசிப்பு

அஜித்துக்கு கைதட்டல் வாங்கிக்கொடுத்த சிவசங்கர்: கே.எஸ்.ரவிகுமார்

புதன் 11 ஆக 2021