விஜய்யின் பீஸ்ட் படத்தில் தனுஷ் ?

entertainment

விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் பீஸ்ட். இந்தப் படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அதோடு, யோகிபாபு, விடிவி கணேஷ், லிலிபுட் ஃபரூக்கி, ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

முதல் கட்ட ஷூட்டிங் ஜார்ஜியாவில் துவங்கியது. சமீபத்தில் இரண்டாம் கட்ட ஷூட்டிங் சென்னையில் துவங்கியது. சென்னையில் மட்டும் 3 இடங்களில் செட் அமைத்து மூன்றாம் ஷெட்யூல் நடந்து வருகிறது.

பீஸ்ட் படம் குறித்த ஒரு செய்தி இணையத்தை தீ பிடிக்க வைத்திருக்கிறது. விஜய்யின் பீஸ்ட் படத்தில் தனுஷ் கேமியோவாக வருகிறார் என்பதே அந்த செய்தி. இந்தச் செய்தி உண்மையா என்பதே பலரின் கேள்வி.

ஏற்கெனவே, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டரில் விஜய்சேதுபதி நடித்தார். அதனால், தனுஷ் நடிப்பாரா என்பது பெரிதளவில் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, பீஸ்ட் படத்தில் தனுஷின் சகோதரர் செல்வராகவன் வில்லனாக நடிக்கிறார். ஆக, தனுஷூம் இடம் பெறுவாரா என்றும் ரசிகர்கள் பல விஷயங்களை கனெக்ட் செய்துவருகிறார்கள்.

இதுகுறித்து பீஸ்ட் படக்குழுவின் நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்தால், விஜய் படத்தில் தனுஷ் நடிக்கவில்லை என்பதை உறுதியாகக் கூறுகிறார்கள். ஒரு சில காரணங்களின் அடிப்படையில் விஜய் படத்தில் தனுஷ் நடிக்கவில்லை என்பதை புரிந்துகொள்ள முடியும். என்னவென்றால், நிற்க நேரமில்லாமல் அடுக்கடுக்காக படங்களை கையில் வைத்திருக்கிறார் தனுஷ்.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன், செல்வராகவன் இயக்கத்தில் ராயன், மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம், தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா படமென அடுக்கடுக்காக எக்கச்சக்கப் படங்களில் பிஸியாக இருக்கிறார் தனுஷ். அதனால், விஜய் படத்தில் நடிப்பார் என்பது சந்தேகத்துக்குரியது.

பீஸ்ட் படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடல் எழுத இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அதுபோல, தனுஷூம் ஒரு பாடல் எழுதலாம் அல்லது ஒரு பாடல் பாட வாய்ப்பிருப்பதாகக் கூறுகிறார்கள். ஏனெனில், பீஸ்ட் படத்திற்கு இசை அனிருத். ஐந்து வருடங்கள் பிரிந்திருந்தக் கூட்டணி தற்பொழுது, மித்ரன் ஜவஹர் படத்துக்காக இணைந்துள்ளது.அதன் தொடர்ச்சியாக, விஜய் படத்தில் தனுஷ் பாடலாசிரியராகவோ, பாடகராகவோ எதிர்பார்க்கலாம் என்கிறார்கள்.

**- தீரன்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *