மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 10 ஆக 2021

நவரசாவைத் தொடர்ந்து மீண்டுமொரு ஆந்தாலஜி!

நவரசாவைத் தொடர்ந்து மீண்டுமொரு ஆந்தாலஜி!

கொரோனா அச்சுறுத்தலுக்குப் பிறகு ஓடிடிக்கென பிரத்யேகமாக சில ஆந்தாலஜி திரைப்படங்கள் உருவாகின. அப்படி, நான்கு ஆந்தாலஜி படங்கள் இதுவரை வெளியாகியும் விட்டன.

முதலில், பிரைம் வீடியோவில் வெளியான புத்தம் புது காலை. சுஹாசினி மணிரத்னம், கெளதம் வாசுதேவ் மேனன், சுதா கொங்கரா, ராஜீவ் மேனன் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஐந்து தனிக்கதைகளாக புத்தம் புது காலை வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி ஒன்றுமில்லாமல் போனது. கதையில் இருக்கும் புதுமையே ஆந்தாலஜியின் ஸ்பெஷல். அழுத்தமான கதைகளைத் தேர்ந்தெடுக்காமல் போனது, புத்தம் புது காலை பெரிதளவுக்கு வெளிச்சம் பெறவில்லை.

இரண்டாவது, நெட்ஃப்ளிக்ஸ் ரிலீஸ் செய்த ‘பாவக்கதைகள்’. இந்த ஆந்தாலஜியை வெற்றி மாறன், கவுதம் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைந்து இயக்கியிருந்தார்கள். மொத்தமாக நான்கு கதைகளுடன் சமூகத்தில் நிகழ்வும் வலிமிகுந்த பகுதிகளை படத்தில் காட்சிப்படுத்தியிருப்பார்கள். பாவக்கதைகள் ஓரளவுக்கு ரசிகர்களை ஈர்த்தது. குறிப்பாக, சுதா கொங்கராவின் ‘தங்கம்’ கதை பரவலாக விவாதிக்கப்பட்டது.

மூன்றாவது, காதலும் காதல் நிமித்தமுமாக ‘குட்டி ஸ்டோரி’ ஆந்தாலஜி வெளியானது. இந்த ஆந்தாலஜியை கௌதம் மேனன், ஏ.எல்.விஜய், வெங்கட் பிரபு, நலன் குமாரசாமி ஆகியோர் முறையே 'எதிர்பாரா முத்தம்', 'அவனும் நானும்', 'லோகம்', 'ஆடல்-பாடல்' என நான்கு கதைகளை இயக்கியிருந்தனர். இந்த நான்கு கதைகளில் நலன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்த கதை மட்டுமே பரபரப்பாகப் பேசப்பட்டது. மற்றதெல்லாம், வேண்டாத ஆணியாகிப் போனது.

சமீபத்தில், நெட்ஃப்ளிக்ஸில் மணிரத்னத்தின் தயாரிப்பில் ‘நவரசா’ எனும் ஆந்தாலஜி படம் கடந்த 6ஆம் தேதி வெளியானது. இந்தப் படத்தின் ஸ்பெஷல் என்னவென்றால், ஒன்பது இயக்குநர்கள் இயக்க, ஒன்பது கதைகளாக உருவாகியிருக்கும் வெப் சீரிஸ் இது. நவரசங்கள் என சொல்லப்படும் ஒன்பது உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கதையாக வெளியாகியுள்ளது. இந்தப் படத்துக்கும் கலவையான விமர்சனங்களே எழுகிறது. பெரிய ஹிட்டென்று சொல்லிவிட முடியாது.

தமிழ் சினிமாவுக்கும் ஆந்தாலஜிக்குமான பொருத்தம் இப்படியாக இருக்கிறது. இந்த நிலையில், மீண்டுமொரு ஆந்தாலஜி படம் ஓடிடிக்கு வருகிறது. இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, புலி மாதிரியான படங்களைக் கொடுத்த சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஆந்தாலஜி ‘கசட தபற’.

சோனி லிவ் ஓடிடியில் செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கிறது. இந்த ஆந்தாலஜியில் ஹரீஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர், ரெஜினா, சாந்தனு, பிரேம்ஜி, விஜயலட்சுமி, வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தில் இடம்பெறும் கதைகளுக்கு ஜிப்ரான், சாம் சி.எஸ்., சந்தோஷ் நாராயணன், பிரேம்ஜி, யுவன் சங்கர் ராஜா, ஷான் ரோல்டன் ஆகிய ஆறு இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளனர். இந்த ஆந்தாலஜியாவது மக்கள் மனதில் இடம் பெற வேண்டும்.

-ஆதினி

அனபெல் சேதுபதி: இயக்குநர் தீபக் விளக்கம்!

5 நிமிட வாசிப்பு

அனபெல் சேதுபதி: இயக்குநர் தீபக் விளக்கம்!

கங்கனா ரணாவத் நேரில் ஆஜராக உத்தரவு!

2 நிமிட வாசிப்பு

கங்கனா ரணாவத் நேரில் ஆஜராக  உத்தரவு!

ரசிகர்களைக் கண்டித்த ரஜினி ரசிகர் மன்றம்!

2 நிமிட வாசிப்பு

ரசிகர்களைக் கண்டித்த ரஜினி ரசிகர் மன்றம்!

செவ்வாய் 10 ஆக 2021