மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 10 ஆக 2021

கெளதம் படத்தில் சிம்புவுக்கு ஜோடி இவரா?

கெளதம் படத்தில் சிம்புவுக்கு ஜோடி இவரா?

ஈஸ்வரன் படத்தைத் தொடர்ந்து சிம்பு நடிப்பில் இந்த வருட ரிலீஸ் ‘மாநாடு’. வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இப்படம் உருவாகி வருகிறது. கடந்த மாதம் இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு முழுமையாக முடிந்தது. படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் மும்மரமாக நடந்துவருகிறது.

பண்டிகை தினத்தைக் குறிவைத்து படத்தை ரிலீஸ் செய்ய சரியான நாளைத் தேடிவருகிறது படக்குழு. மாநாடு முடிந்த கையோடு ‘பத்து தல’ படத்தைத் துவங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. கன்னடத்தில் வெளியான ‘முஃப்டி’ படத்தின் தமிழ் ரீமேக் தான் ‘பத்து தல’. ஜில்லுனு ஒரு காதல் கிருஷ்ணா இயக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் படம் உருவாக இருக்கிறது. இந்தப் படத்துக்கு முன்பாக, கெளதம்மேனன் இயக்கத்தில் ஒரு படத்தை முடிக்க இருக்கிறார் சிம்பு.

சிம்பு நடிக்க கெளதம் இயக்க இருக்கும் படம் விடிவி 2 என்றே ஆரம்பத்தில் சொல்லப்பட்டது. ஆனால், ‘நதிகளில் நீராடும் சூரியன்’ என புது ட்விஸ்ட் கொடுத்தார் கெளதம் மேனன். மீண்டுமொரு ட்விஸ்டாக படத்தின் தலைப்பு ‘வெந்து தணிந்தது காடு’ என மாற்றப்பட்டுள்ளது. டைட்டில் மட்டுமல்ல, கதையும் மாற்றப்பட்டுள்ளதாம்.

முன்பெல்லாம் சிம்புவால் பிரச்னைகள் வரும். இப்போது, முன்செய்த வினையின் காரணமாக, எங்கு திரும்பினாலும் சிம்புவைச் சுற்றி பிரச்னையாகவே இருக்கிறது. எல்லா சிக்கலையும் சரி செய்து, வெந்து தணிந்தது காடு படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு திருச்செந்தூரில் பூஜையுடன் துவங்கியது. முதல் கட்ட காட்சியில் சிம்புவும் ராதிகாவும் நடித்துவருகிறார்கள்.

அதோடு, சிம்புவுக்கு ஜோடியாக புதுமுக நடிகையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் கெளதம்மேனன். கன்னட நடிகையான கயாடு லோகர் என்பவர் சிம்புவுக்கு நாயகியாக நடிக்கிறார். கெளதம் மேனன் படத்தில் நாயகிகளுக்கு எப்போதுமே முக்கியத்துவம் இருக்கும். கெளதம் மேனன் படத்தில் நாயகிகள் யுனிக்காகத் தெரிவார்கள்.

மின்னல்லே ரீனா, காக்க காக்க மாயா, வாரணம் ஆயிரம் மாலினி & மேக்னா, நீதானே என் பொன்வசந்தம் நித்யா, என்னை அறிந்தால் ஹேமானிகா என சொல்லிக் கொண்டே போகலாம். பொதுவாக, கெளதம் மேனன் படங்களில் நாயகிகள் படத்தில் பிரதானமாக இருப்பார்கள் அல்லது நாயகியைச் சுற்றி படத்தின் கதை அமைந்திருக்கும். அதனால், கெளதமின் அடுத்தப் பட நாயகியின் கதாபாத்திரத்தின் மீதும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

- ஆதினி

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

செவ்வாய் 10 ஆக 2021