மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 10 ஆக 2021

கடற்படை ஆபரேஷனை கதைகளமாக கொண்ட ஆபரேஷன் அரபைமா!

கடற்படை ஆபரேஷனை கதைகளமாக கொண்ட ஆபரேஷன் அரபைமா!

முன்னாள் கடற்படை வீரர் பிராஷ் இயக்கத்தில் துருவங்கள் பதினாறு படத்திற்குப் பின் கடற்படை அதிகாரியாக ரகுமான் நடித்திருக்கும் படம் ஆபரேஷன் அரபைமா.

இந்திய நாட்டை அந்நிய ஆபத்துகள் சூழும் நேரங்களிலும், தீயவர்கள் நம் நாட்டிற்குள் கொடுஞ்செயல்கள் செய்யும் நோக்கத்துடன் நுழையும் நேரங்களிலும், நமது இராணுவ வீரர்கள் எதிரிகளிடம் இருந்து நம்மைக் காக்கின்றனர். அதற்காக பல ஆபரேஷன்களை நம் நாட்டு வீரர்கள் செய்திருக்கின்றனர். அப்படி நடுக்கடலில் நடந்த ஒரு உண்மையான இராணுவ ஆபரேஷனை தழுவி எடுக்கப்பட்ட படம் தான், “ஆபரேஷன் அரபைமா” என்கிறார் இயக்குநர் பிராஷ்.

தமிழ்நாடு, கேரளா, அந்தமான், கோவா, துபாய் உள்பட பல இடங்களில், பல கடல்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது. படத்தின் இயக்குநர் பிராஷ் முன்னாள் கடற்படை வீரர் என்பதால், கடலில் நடைபெறும் ஆபரேஷன் உண்மையான ஆபரேஷன் போல இருக்க வேண்டும் என்பதற்காக நிறைய உழைத்ததாக கூறுகிறார்.

கேரளா போலீஸ் கமாண்டோ படையின் துணை கண்காணிப்பாளர் அஜித்குமார் மற்றும் நேஷனல் செக்யூரிட்டி கார்டு கமான்டோ பயிற்சியாளர் கேப்டன் அனில்குமார் ஆகியோரை வரவழைத்து ஆபரேஷன் காட்சிகளை வடிவமைத்ததாக கூறுகிறார் இயக்குநர். இந்த படத்தின் இணை தயாரிப்பாளர் ஜெயின் ஜார்ஜ்-ம் ஒரு கடற்படை வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரகுமான், டினி டாம், பாலாஜி, நாடோடிகள் அபிநயா, அனுப் சந்திரன், ஷிகாத், நேகா சக்ஸேனா, அர்விந்த், சஜி, மனிஷா, ரமேஷ் ஆறுமுகம், கௌரி லஷ்மி, மேபூ உள்பட பலர் நடித்திருக்கும் ஆபரேஷன் அரபைமா படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ராகேஷ் பிரம்மானந்தன், ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஃபீனிக்ஸ் உதயன். பாடல்களை முருகன் மந்திரம் எழுதி இருக்கிறார். நிர்வாகத் தயாரிப்பு : ஏழுமலை சரவணன். இணை தயாரிப்பு: ஜெயின் ஜார்ஜ். தயாரிப்பு: டைம் அண்ட் டைட் ப்ரேம்ஸ் ஸ்டுடியோஸ்.

-இராமானுஜம்

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

தன் வாயால் சர்ச்சையில் சிக்கிய அஷ்வின்

7 நிமிட வாசிப்பு

தன் வாயால்  சர்ச்சையில் சிக்கிய அஷ்வின்

அதர்வா படத்தை ராஜ்கிரண் தவிர்க்கிறாரா?

2 நிமிட வாசிப்பு

அதர்வா படத்தை ராஜ்கிரண் தவிர்க்கிறாரா?

செவ்வாய் 10 ஆக 2021