மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 10 ஆக 2021

சியான் 60 டைட்டில் எப்போது ?

சியான் 60 டைட்டில் எப்போது ?

தமிழ் சினிமாவில் உருவாகிவரும் படங்களில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று ‘சியான் 60’.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடிக்க இப்படம் உருவாகி வருகிறது. விக்ரமுக்கு ஜோடியாக சிம்ரனும், துருவ் ஜோடியாக ப்ரியா பவானி ஷங்கரும் நடிக்கிறார்கள். அதோடு, போலீஸ் அதிகாரியாக துருவ் நடிக்கிறார். கேங்க்ஸ்டராக வில்லத்தனம் காட்டுகிறாராம் விக்ரம். சந்தோஷ் நாராயணன் படத்துக்கு இசையமைத்து வருகிறார்.

கூடுதலாக, இந்தப் படத்தில் மூன்று கெட்டப்புகளில் விக்ரம் நடிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. ஒரு படத்துக்கு பல கெட்டப்புகளைப் போடுவது விக்ரமுக்கு ஏதும் புதிதல்ல. கோப்ராவிலும் பல கெட்டப்புகளில் வருகிறார். அதுபோல, சியான் 60 படத்திலும் விக்ரமை வெரைட்டியான கெட்டப்புகளில் பார்க்கலாம்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பின் பெரும்பகுதி முடிந்துவிட்டது. சமீபத்தில் டார்ஜிலிங்கில் படப்பிடிப்பு நடந்து வந்தது. புது அப்டேட்டாக, சியான் 60-க்கான முழு படப்பிடிப்பையும் முடித்துவிட்டார் துருவ். இன்னும், நேபாள எல்லைப் பகுதியில் ஒரு வாரம் ஷூட்டிங் மட்டுமே மீதமிருக்கிறது. அதோடு, சியான் 60 முழுமையாக முடிகிறதாம்.

நமக்குக் கிடைத்த தகவல்படி, சியான் 60-க்கான டைட்டிலை வருகிற ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெளியிட அதிக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தை முடித்த கையோடு, மாரிசெல்வராஜ் இயக்கும் படத்துக்குச் செல்கிறார் துருவ். கால்பந்து விளையாட்டை மையமாக் கொண்டு உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டப் படத்தில் துருவ் நடிக்க இருக்கிறார்.

அதுபோல, அஜய்ஞானமுத்து இயக்கத்தில் உருவாகிவரும் கோப்ரா இன்னும் முடியவில்லை. அதனால், கோப்ரா ஷூட்டிங்கில் கலந்துகொள்ள இருக்கார் விக்ரம். கோப்ரா முடித்துவிட்டு மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தையும் கையோடுமுடிக்க இருக்கிறார்.

அப்படியே, கையோடு கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படத்துக்கும் கொஞ்சம் ஷூட்டிங் மீதமிருக்கிறது. அதையும் விக்ரம் இந்த வருடத்துக்குள் முடித்துவிடுவார் என்று நம்பப்படுகிறது.

- ஆதினி

அஜித்குமார் கேட்ட ஆலோசனை!

2 நிமிட வாசிப்பு

அஜித்குமார் கேட்ட ஆலோசனை!

வெற்றியை பதிவு செய்த கோடியில் ஒருவன்!

4 நிமிட வாசிப்பு

வெற்றியை பதிவு செய்த கோடியில் ஒருவன்!

பிக்பாஸ் ஒளிபரப்பு தேதிகள் அறிவிப்பு!

5 நிமிட வாசிப்பு

பிக்பாஸ்  ஒளிபரப்பு தேதிகள் அறிவிப்பு!

செவ்வாய் 10 ஆக 2021