மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 9 ஆக 2021

மீண்டும் சிம்பு படத் தலைப்பு மாற்றப்படுமா?

மீண்டும் சிம்பு படத் தலைப்பு மாற்றப்படுமா?

ஒரே டைட்டிலில் 2 படங்கள்... மீண்டும் சிம்பு-GVM படத் தலைப்பு மாற்றப்படுமா?கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்க உருவாகிவரும் படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்துக்கு ஆரம்பத்தில் ‘நதிகளில் நீராடும் சூரியன்’ என தலைப்பு அறிவிக்கப்பட்டது. தயாரிப்பு தரப்பில் துவங்கி ரசிகர்கள் வரை அனைவரிடமும் எதிர்ப்பு கிளம்பிய காரணத்தால் ‘நதிகளில் நீராடும் சூரியன்’ தலைப்பானது ‘வெந்து தணிந்தது காடு’ என மாற்றப்பட்டது.

சொல்லப் போனால், புதிய தலைப்பை யோசிக்க வேண்டிய நிர்பந்தம் வந்தபோது கெளதம் மேனன் சாய்ஸாக ‘அக்னி குஞ்சொன்று கண்டேன்’ எனும் தலைப்பை தான் யோசித்தாராம். இந்த டைட்டிலும் பகடிக்கு உள்ளாகும் என தயாரிப்பு தரப்பு நினைத்ததால் இறுதியாக, ‘வெந்து தணிந்தது காடு’ எனும் தலைப்பு அறிவிக்கப்பட்டது.

சிம்பு ரசிகர்கள் கொண்டாடிவந்தாலும், இந்தத் தலைப்பினால் ஈழ இயக்குநர் ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கிறார். தமிழீழத்திலிருந்து கடும் போராட்டங்களுக்கு மத்தியில் ஈழ மக்களின் கதையைப் பேசும் ஒரு படமாக ‘வெந்து தணிந்தது காடு’ எனும் தலைப்பில் படமொன்றை இயக்கியிருக்கிறார் மதிசுதா. இலங்கையில் ஓடிடி பெரியளவில் வளர்ச்சியடையவில்லை. தமிழ் சினிமா சார்ந்த ஓடிடியையே நம்பியிருந்தார்கள். இந்நிலையில், ஒரே பெயரில் இரண்டு படங்கள் உருவாவதால் சின்ன பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தின் வியாபாரத்தில் மிகப் பெரியளவில் பாதிக்கப்படும் என்பதே உண்மை.

இந்தப் பிரச்னையில் இரண்டு தரப்பையுமே குற்றம் சொல்லமுடியாது. தமிழ் சினிமாவுக்கென இருக்கும் சங்கத்தில் இந்த டைட்டிலில் படங்கள் ஏதும் பதியப்பட்டிருக்கிறதா என்பதை சோதித்தப் பின்னரே, புதிய டைட்டிலை அறிவித்தது வேல்ஸ் நிறுவனம்.

அதே நேரம், தமிழ் சினிமா ஆடியன்ஸை நம்பியே ஈழ இயக்குநரும் படத்தை உருவாக்கிவிட்டார். இந்நிலையில், ஈழப் படம் குறித்த செய்தி தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் நிறுவனத்தின் காதுகளை சமீபத்தில் எட்டியிருக்கிறது.

ஏற்கெனவே படத்தின் டைட்டில் மாற்றப்பட்டிருக்கிறது. மீண்டும் மாற்றினால் நன்றாக இருக்காது என்பதால், அந்தப் படத்தை உருவாக்க ஏற்பட்டச் செலவு தொகையை தந்துவிட முன்வருவதாக ஐசரி கணேஷ் கூறியிருக்கிறாராம். ஆனால், கலைப்படைப்பாக படத்தைப் பார்ப்பதால் பணம் வேண்டாம் என்கிறார்களாம்.

ஆக, இன்னும் பேச்சுவார்த்தை முடிவுக்கு வரவில்லை. மீண்டும், கெளதம் - சிம்பு படத்தின் தலைப்பு மாற்றப்படுமா என்பதும் உறுதியாகத் தெரியவில்லை.

- தீரன்

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

3 நிமிட வாசிப்பு

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

3 நிமிட வாசிப்பு

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

திங்கள் 9 ஆக 2021