மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 9 ஆக 2021

வீட்டிலேயும் வெள்ளை அறிக்கை: அப்டேட் குமாரு

வீட்டிலேயும் வெள்ளை அறிக்கை: அப்டேட் குமாரு

இன்னிக்கு டிவி பாத்துக்கிட்டே இருந்த என் பொண்டாட்டி திடீர்னு ஏங்க... நாலஞ்சு மாசமா உங்க சம்பளம் பத்தி சரியா என்கிட்ட சொல்றதே இல்லை. எவ்வளவு கடன் வாங்கினீங்க, எவ்வளவு வட்டி கட்றீங்க. குடும்ப செலவு என்ன எல்லாம் குழப்பமா இருக்கு. அதனால அடுத்த வாரம் நம்ம ஃபேமிலி நிதி நிலைமை என்னானு ஒரு வெள்ளை அறிக்கை கொடுங்கனு கேட்டுப்புட்டா. ஏங்க பிடிஆர் சார்... இதெல்லாம் நல்லா இருக்கா நீங்களாச்சும் கொடுத்துட்டீங்க. ஃபேமிலி மேன் நாங்கள்லாம் பொண்டாட்டிகிட்ட எப்படி வெள்ளை அறிக்கை கொடுக்குறதாம்?

நீங்க அப்டேட் பாருங்க

ச ப் பா ணி

சீக்கிரம் தீர்ந்து போகும் ஆன்ராய்ட் போன் சார்ஜ் போலத்தான்..

ஞாயிற்றுக்கிழமையும்

Mannar & company

டெல்லி க்ரூப் தமிழ்நாட்டுக்கு வந்தால் தேர்தல் வரப்போகுதுன்னு அர்த்தம்,

அதுவே தமிழ்நாடு க்ரூப் டெல்லிக்கு போனால் ரெய்டு வரப்போகுதுன்னு அர்த்தம்!

ரஹீம் கஸ்ஸாலி

தமிழகத்தில் ஒரு குடும்பத்தின் மீதான கடன் சுமை 2,63,976 ரூபாய்- பி.டி.ஆர். தியாகராஜன்

இவ்வளவெல்லாம் நம்மால் கட்ட முடியாது. வேண்டுமானால் ரேஷன் கடையில் கொரோனா நிதியாக கொடுத்த 4000 ரூபாயை திருப்பி தந்துடறோம்.

Mannar & company

சுதந்திரம் என்பது கைரேகை மாதிரி எல்லோருக்கும் இருக்கும் ஆனா, அது மனிதனுக்கு மனிதன் மாறுபடும் அவ்வளோதான்!

amudu

மது போதையில் இருப்பவர்களுக்கு, எதிரில் இருப்பவர்கள் இரண்டாக கூட தெரியும். ஆனால் புகழ் போதையில் இருப்பவர்களுக்கு தான், எதிரில் இருப்பவர்கள் ஒரு பொருளாகக் கூட தெரிய மாட்டார்கள்.

ச ப் பா ணி

தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் 2,63,976 ரூபாய் கடன் உள்ளது.

என் கடன் கடைசிவரை கடன்காரனாக இருப்பதுவே

மயக்குநன்

வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் 14 எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்!- செய்தி.

'உழவு'க்கு ஆதரவாகவும், 'உளவு'க்கு எதிராகவும் இணைஞ்சிருக்காங்க போல..?!

சரவணன். ℳ

ராத்திரி நேரத்துல தனியா பேய் படம் பார்த்தும் பயப்படாம இருக்கான்னா அவன் கண்டிப்பா கல்யாணம் ஆனவனா தான் இருப்பான்.

ℳ𝐬𝐝✩இதயவன்✩

கரோனா அபாயத்துக்கான சிவப்புப் பட்டியலில் இருந்து மஞ்சள் பட்டியலுக்கு இந்தியா மாற்றப்பட்டுள்ளது ~ பிரிட்டன்

அப்பிடியே வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து வல்லரசு பட்டியலுக்கு தூக்கி போட்டு விடுங்க..?!

கோழியின் கிறுக்கல்!!

எல்லா உறவுக்கும் கைப்புள்ள மாதிரி ஒரு எல்லைக்கோடு வரைந்து அதற்குள் நின்றுக் கொள்வது நலம்!

இல்லையெல் கோட்டை தாண்டி வந்து அடிக்கும் கட்டத்துரை போல வெளுத்து வாங்கி விடும்!!

-லாக் ஆஃப்

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

3 நிமிட வாசிப்பு

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

திங்கள் 9 ஆக 2021