மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 9 ஆக 2021

நண்பர்களுக்காக விஷால் செய்யும் தியாகம் !

நண்பர்களுக்காக விஷால் செய்யும் தியாகம் !

விஷால் நடிப்பில் ஆனந்த் சங்கர் இயக்கியிருக்கும் ‘எனிமி’ படமும், தொ.ப.சரவணன் இயக்கத்தில் விஷால் நடித்துவரும் ‘விஷால் 31’ படமும் விஷாலுக்கு அடுத்தடுத்து வெளியாக இருக்கும் படங்கள்.

இதில், எனிமி படத்தில் விஷாலுடன் ஆர்யா நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிட்டது. சமீபத்தில் டீஸர் கூட வெளியாகி வைரலானது. எப்படியும் இரண்டொரு மாதத்தில் படத்தின் ரிலீஸை எதிர்பார்க்கலாம். அதுபோல, விஷால் 31 படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் தற்பொழுது நடந்துவருகிறது. விஷாலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரிக்கிறது. இன்னும் 15 நாட்களில் படப்பிடிப்பு முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஷாலுக்கு நாயகியாக டிம்பிள் ஹயாத்தி நடித்திருக்கிறார். யுவன் இசையமைத்துவருகிறார்.

இவ்விரு படங்களைத் தொடர்ந்து நண்பர்களுக்காக ஒரு படமொன்றில் நடிக்க இருக்கிறார் விஷால். இவரின் சினிமா தொடர்பான அனைத்துப் பணிகளையும் கவனித்துக் கொள்பவர்கள் நடிகர்களான நந்தா மற்றும் ரமணா. விஷாலின் நெருங்கிய நண்பர்கள். சினிமாவில் பெரியதாக வரவேற்பும், சாதனையும் செய்யவில்லை.

நண்பர்கள் இருவரையும் சினிமாவில் வெற்றிகரமான நடிகர்களாக மாற்றிவிட நினைக்கிறார் விஷால். அதனால், நந்தாவும், ரமணாவும் இணைந்து தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் விஷால். அந்தப் படத்தில் முக்கிய ரோல்களில் இருவரும் நடிக்கவும் இருக்கிறார்கள்.

விஷாலுக்கென ஒரு பெரிய மார்கெட் இருக்கிறது. படத்தின் குவாலிட்டி எப்படியிருந்தாலும், விஷாலின் மார்கெட்டில் எந்த மாற்றமும் இருக்காது. அதைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு நண்பர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார் விஷால்.

எந்த அளவுக்கு பட்ஜெட்டைக் குறைத்து சிக்கனமாக எடுக்க முடியுமோ எடுத்துக் கொள்ளுமாறும் அட்வைஸ் கூறியிருக்கிறார் விஷால். பொதுவாக, ஒரு ஹீரோவுக்கு உருவாகும் படத்தின் குவாலிட்டி, பட்ஜெட் எப்போதுமே அதிகமாக இருக்க வேண்டுமென விரும்புவார்கள். ஆனால், நண்பர்களுக்காக குறைந்த பட்ஜெட்டில் படம் நடிக்க இறங்கிவந்திருக்கிறார் விஷால்.

- ஆதினி

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

திங்கள் 9 ஆக 2021