மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 9 ஆக 2021

2 பெரிய நிறுவனத்துடன் சிவகார்த்திகேயன் போட்ட டீல்!

2 பெரிய நிறுவனத்துடன் சிவகார்த்திகேயன் போட்ட டீல்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் மூன்று படங்கள் தயாராகிவருகிறது. ஒன்று, நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ப்ரியங்கா அருள்மோகன், வினய் நடிப்பில் ‘டாக்டர்’. இந்தப் படம் முழுமையாக முடிந்துவிட்டது. ரிலீஸூக்கான சரியான நேரத்துக்காக காத்திருக்கிறது. மார்ச் 26ஆம் தேதியே வெளியாகியிருக்க வேண்டிய இப்படம், தேர்தல், கொரோனா இரண்டாம் அலை காரணங்களால் தள்ளிப் போனது. தற்பொழுது, ஓடிடியா அல்லது திரையரங்க ரிலீஸா என்பது இன்னும் உறுதியாகாமல் இருக்கிறது. இப்படத்தை கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இரண்டாவது, ‘இன்று நேற்று நாளை’ படத்தின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல்ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘அயலான்’. அறிவியல் புனைவுத் திரைப்படமாக உருவாகிவருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிட்டது. போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் போய்க் கொண்டிருக்கிறது. ஏலியன் கான்செப்ட் என்பதால் சிஜி பணிகள் எக்கச்சக்கமாக இடம்பெறுகின்றன. அதனால், படத்தின் ரிலீஸ் தாமதமாகி வருகிறது. இப்படத்தை ஆர்.டி.ராஜாவுடன் இணைந்து கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் தயாரித்து வருகிறது.

மூன்றாவது, புதுமுக இயக்குநர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ப்ரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் டான். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கோவை உள்ளிட்ட பகுதிகளில் நடந்துவருகிறது. இப்படம், எப்படியும் இரண்டொரு மாதத்தில் முடிந்துவிடும் என்று சொல்லப்படுகிறது.

இப்படத்தைத் தொடர்ந்து, அட்லீயின் உதவியாளராக இருந்த அசோக் என்பவரின் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் துவங்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது. சிவகார்த்திகேயனுக்கு இருக்கும் கடன் பொறுப்பை ஏற்றுக் கொண்ட கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸூக்காக இந்தப் படத்தை நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.

இந்தப் படத்துக்குப் பிறகு, இரண்டு முன்னணி தயாரிப்பு நிறுவனங்களுக்கு படம் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறாராம் சிவகார்த்திகேயன். தமிழில் பெரிய ஹீரோஸ்களுக்கு படங்களை தயாரித்துவரும் நிறுவனங்களே அது.

கலைப்புலி எஸ். தாணுவின் வி கிரியேஷன் நிறுவன தயாரிப்பிலும், சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்திலும் நடிக்க இருக்கிறாராம் சிவகார்த்திகேயன். அதற்கானப் பேச்சுவார்த்தைகள் மும்மரமாகியிருக்கிறது. பெரிய ஹீரோஸூக்கு படங்களை தயாரிக்கும் நிறுவனங்களென்பதால், பெரிய பட்ஜெட்டில் சிவகார்த்திகேயனுக்கு அடுத்தடுத்து இரண்டு படங்கள் உருவாக இருப்பது மட்டும் உறுதி

- தீரன்

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

திங்கள் 9 ஆக 2021