மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 9 ஆக 2021

‘நாங்க வேற மாதிரி’ உருவானதெப்படி? யுவன் பதில்!

‘நாங்க வேற மாதிரி’ உருவானதெப்படி? யுவன் பதில்!

அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் படம் வலிமை. அஜித்துடன் ஹூமா குரேஷி, கார்த்திகேயா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

நேர்கொண்டப் பார்வை படத்துக்குப் பிறகு ஹெச்.வினோத் - அஜித் - யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியில் வலிமை உருவாகி வருகிறது. நேர்கொண்டப் பார்வை படத்தில் பாடல்கள், பின்னணி இசை என இரண்டிலும் மிரட்டியிருப்பார் யுவன். அதனால், வலிமை பாடல் மீதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

வலிமை ஷூட்டிங் முடிவதில் நிகழ்ந்த தாமதம் காரணமாக, யுவன் இசையும் தாமதமானது. தற்போது, படத்திலிருந்து முதல் சிங்கிளாக ‘நாங்க வேற மாதிரி’ எனும் பாடல் வெளியாகி டிரெண்டாகி வருகிறது. இயக்குநர் விக்னேஷ் சிவன் பாடலெழுத யுவனும் அனுராக் குல்கர்னியும் இணைந்து இந்தப் பாடலைப் பாடியுள்ளனர்.

போலீஸ் அதிகாரியாகப் படத்தில் நடித்திருக்கிறார் அஜித். கதைப்படி, சொந்த ஊரான மதுரையில் அஜித்தின் இன்ட்ரோ பாடலாக இது அமைந்திருக்கிறது. ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்புக்கு பிரதிபலனாக பாடலும் ஹிட்டாகிவிட்டது.

இந்தப் பாடல் எப்படி படத்துக்குள் வந்தது எனும் கேள்விக்கு யுவன் பதிலளித்துள்ளார். “படம் தொடங்கும் காலக்கட்டத்திலேயே அஜித் சாருக்கு மாஸான இன்ட்ரோ பாடல் வேண்டும் என்று வினோத் கூறியிருந்தார். ரசிகர்களுக்குக் கொண்டாட்டமாக இருக்கும் விதத்தில் பாடல் வர வேண்டுமென்று விரும்பினேன். அப்படியே இந்தப் பாடலும் உருவானது” என கூறினார் யுவன்.

கூடுதலாக, இந்தப் பாடத்தில் அம்மா சென்டிமென்டில் ஒரு பாடல் உருவாகியிருக்கிறதாம். அந்தப் பாட்டும் செம ரீச் ஆகும் என்று படக்குழு முழுமையாக நம்புகிறதாம்.

ஏற்கெனவே, வலிமை படத்திலிருந்து ஃபர்ஸ்ட் லுக் & மோஷன் போஸ்டரெல்லாம் வெளியாகி செம ஹிட்டானது. கடந்த ஆகஸ்ட் 2இல் முதல் சிங்கிளான ‘நாங்க வேற மாதிரி’ பாடல் வெளியானது. இப்போது வரை யூடியூப்பில் 13 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- ஆதினி

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

6 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

முதல்வர் வீட்டின் முன் உண்ணாவிரதம் இருப்பேன்: டி.ராஜேந்தர்

8 நிமிட வாசிப்பு

முதல்வர் வீட்டின் முன் உண்ணாவிரதம் இருப்பேன்: டி.ராஜேந்தர்

திங்கள் 9 ஆக 2021