மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 8 ஆக 2021

இன்று இறுதி நாள் ஆட்டம்: வெற்றி வாய்ப்பில் இந்திய அணி!

இன்று இறுதி நாள் ஆட்டம்: வெற்றி வாய்ப்பில் இந்திய அணி!

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து 303 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நான்காம் நாள் முடிவில் இந்தியா ஒரு விக்கெட் இழப்புக்கு 51 ரன்கள் எடுத்துள்ளது. இன்று (ஆகஸ்ட் 8) இறுதி நாளில் இந்தியா வெற்றி பெற 157 ரன்கள் தேவை என்கிற நிலையில் ஆட இருக்கிறது. இந்தியா வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதால் இந்தப் போட்டியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 183 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 278 ரன் எடுத்தது. இது இங்கிலாந்து ஸ்கோரை விட 95 ரன் கூடுதலாகும்.

தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் சிறப்பாக ஆடி 84 ரன்னும், ஜடேஜா 56 ரன்னும் எடுத்தனர். ராபின்சன் 5 விக்கெட்டுகளும் , ஆண்டர்சன் 4 விக்கெட்டுகளும் கைப்பற்றினார்கள்.

95 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 25 ரன் எடுத்து இருந்தது.

இந்த நிலையில், நான்காம் நாள் ஆட்டம் நேற்று (ஆகஸ்ட் 7) நடைபெற்றது. அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் பொறுமையாக விளையாடி சதமடித்தார். 109 ரன்னில் ஆட்டமிழந்தார். சாம் கர்ரன் 32 ரன்னும், பேர்ஸ்டோவ் 30 ரன்னும் எடுத்தனர்.

இந்தியா சார்பில் பும்ரா ஐந்து விக்கெட்டுகளும், சிராஜ், ஷர்துல் தாகுர் தலா 2 விக்கெட்டுகளும், ஷமி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா இரண்டாவது இன்னிங்ஸை விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல், ரோகித் சர்மா களமிறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 34 ரன்கள் சேர்த்த நிலையில் கே.எல்.ராகுல் 26 ரன்னில் வெளியேறினார்.

நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா ஒரு விக்கெட்டுக்கு 52 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா 12 ரன்னும், புஜாரா 12 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

இன்று (ஆகஸ்ட் 8) இறுதி நாளில் 157 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றி பெற வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

-ராஜ்

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

3 நிமிட வாசிப்பு

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

உதயநிதி படத்தில் வடிவேலு?

3 நிமிட வாசிப்பு

உதயநிதி படத்தில் வடிவேலு?

வடிவேலு படத் தலைப்பு: சிவகார்த்திகேயன் கருத்து!

3 நிமிட வாசிப்பு

வடிவேலு படத் தலைப்பு: சிவகார்த்திகேயன் கருத்து!

ஞாயிறு 8 ஆக 2021