மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 8 ஆக 2021

தாவார ஒலிம்பிக்: அப்டேட் குமாரு

தாவார ஒலிம்பிக்: அப்டேட் குமாரு

தீபக் சோப்ரா ஒலிம்பிக்ல ஈட்டி எறிஞ்சதுல தங்கம் வாங்கியிருக்காரு. என்னோட புருசனும்தான் இந்த இருபது வருசத்துல தினம் தினம் என்னை எடுத்தெறிஞ்சு பேசுறாரு. அவருக்கு ஒரு பதக்கம் கொடுத்தா நல்லா இருக்கும், பொண்ணு கல்யாணத்துக்கு கொஞ்சம் நகை சேர்த்த மாதிரியும் இருக்கும்னு பால்வாங்கிட்டிருக்கும்போது ரெண்டு ஆன்ட்டிகள் பேசிக்கிட்டிருந்தாங்க. ஒலிம்பிக்கை என்ன உங்க வீட்டு தாவாரத்துலயா நடத்திக்கிட்டிருக்காங்க போக்கானு அந்த பால் காரு பொங்கிட்டாரு.

நீங்க அப்டேட் பாருங்க

ரஹீம் கஸ்ஸாலி

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுகவை வலியிறுத்தி சென்னையில் வரும் 17- ஆம் தேதி ஆர்ப்பாட்டம்- ஜி.கே.வாசன்

அப்படியே இந்த ஏழு வருடத்தில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத பாஜக பக்கமும் சைக்கிளை திருப்பறது...?

ச ப் பா ணி

பெருமைக்காக சொல்லலைன்னு சொல்லிட்டு, பிறகு சொல்பவை அனைத்தும் பெருமைக்காகவே இருக்கும்!

Mannar & company

தினமும் ராத்திரி தூங்கப்போறப்பதான் நாளைலேருந்து "வாக்கிங்" போகணும்ங்கற ஞாபகமே வருது!

பர்வீன் யூனுஸ்

மனித முகத்தில் ஒரு சின்ன குற்றாலம் - கண்ணீர்.

கடைநிலை ஊழியன்

சலூன் கடைக்காரர் கிட்ட சொல்ல கூடாத வார்த்தை "லைட்டா கம்மி பண்ணுங்க".. அவ்ளோ தான், அம்மாக்களின் ஆசைய நிறைவேற்றிவிடுவார் !!

செங்காந்தள்

வீட்டில் தொலைந்த பொருளைத் தேடும் போது தேடும் பொருள் கிடைக்காவிட்டாலும்

மலரும் நினைவுகளாவது கிடைக்கும்...!!!

Mannar & company

இரவில் லேட்டா வந்தாலும் காரணம் கேட்காத மனைவி கொடுப்பதே ஆகச் சிறந்த சுதந்திரம்.

தர்மஅடி தர்மலிங்கம்

வெற்றிகரமாக நடைபெற்ற ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் ஆளும் திமுகவை அதிர வைத்துள்ளது”; அண்ணாமலை.

ஆக... நீங்க உண்ணாவிரத போராட்டத்தை கர்நாடக பாஜகவை எதிர்த்து நடத்தலை..??

PrabuG

என்னை பிரதமராக பார்க்காமல் நண்பராக பாருங்கள் - மோடி.

ஊர்ல பத்து பதினைஞ்சு ஃப்ரெண்ட் வச்சிருக்கவன்லாம் சந்தோஷமா இருக்கான்.

ஒரே ஒரு ஃப்ரெண்ட வச்சுகிட்டு நான் படுற அவஸ்தை இருக்கே அய்யூய்யூயூயூ..

ச ப் பா ணி

தீபாவளி நகைச் சீட்டு மூலம் மோசடி - ரூ.1.50 கோடி உடன் உரிமையாளர் மாயம்

இதுபோல் செய்தி வந்தால் தீபாவளி பக்கத்தில் வந்திடுச்சுனு அர்த்தம்...

கடைநிலை ஊழியன்

என்னடா ஞாயிற்றுக்கிழமை அதுவுமா, சமையல்கட்டுல இருந்து சாம்பார் வாசம் வருது..

இன்னைக்கு ஆடி அமாவாசை வாத்தியாரே.

மயக்குநன்

கேல் ரத்னா விருதுக்கு மேஜர் தயான் சந்த் பெயரை மாற்ற இந்தியா முழுவதிலும் இருந்து ஏராளமான கோரிக்கைகள் வந்தன!- மோடி.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்கச் சொல்லியும்தான் எக்கச்சக்கமான கோரிக்கைகள் வந்திருக்குமே..?!

கோழியின் கிறுக்கல்!!

சாக்லேட் கொடுத்து சமாதானப்படுத்தப்பட்ட குழந்தைகள், இன்று செல் போன் கொடுத்து சமாதானப் படுத்தப் படுகிறார்கள்!!

-லாக் ஆஃப்

திறந்தவெளியில் ஜெய்பீம் படத்தைக் கண்டுகளித்த மக்கள்!

3 நிமிட வாசிப்பு

திறந்தவெளியில் ஜெய்பீம் படத்தைக் கண்டுகளித்த மக்கள்!

பிரமாண்டமாக நடக்கும் கத்ரினா கைப் திருமணம்!

2 நிமிட வாசிப்பு

பிரமாண்டமாக நடக்கும் கத்ரினா கைப் திருமணம்!

கபில் தேவ் உரிமையைப் பெற்ற பிரித்வி ராஜ்

2 நிமிட வாசிப்பு

கபில் தேவ் உரிமையைப் பெற்ற பிரித்வி ராஜ்

ஞாயிறு 8 ஆக 2021