மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 8 ஆக 2021

’பீஸ்ட்’ படத்தில் டான்ஸிங் ரோஸ்!

’பீஸ்ட்’ படத்தில் டான்ஸிங் ரோஸ்!

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘மாஸ்டர்’ இந்த வருடம் வெளியானது. விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி நடித்திருந்தார். நாயகியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். அனிருத் இசையில் பாடல்களும் செம ஹிட்.

மாஸ்டர் ஹிட்டைத் தொடர்ந்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் 65 உருவாகியிருக்க வேண்டியது. சில காரணங்களால் அக்கூட்டணி இணையவில்லை. அந்த வாய்ப்பு நெல்சன் திலீப் குமாருக்கு கிடைத்தது. கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கியவர் நெல்சன்.

தற்பொழுது, நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகிவரும் படம் ‘பீஸ்ட்’. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி செம வைரலானது. விஜய்க்கு நாயகியாக பூஜா ஹெக்டே நடித்துவருகிறார்.

பீஸ்ட் படத்துக்கான முதல் ஷெட்யூல் ஜார்ஜியாவில் நடந்தது. தொடர்ந்து, இரண்டாவது, மூன்றாவது கட்டப் படப்பிடிப்புகள் சென்னையில் நடந்துவருகிறது.

பிரம்மாண்டமான மால் செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடத்திவருகிறார்கள். தீவிரவாதிகளின் பிடியிலிருந்து மாலில் இருக்கும் மக்களை விஜய் காப்பாற்றுவது போன்ற காட்சிகளை படமாக்கிவருகிறதாம் படக்குழு.

இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது தயாரிப்பு தரப்பு. அதில், இயக்குநர் செல்வராகவன், யோகிபாபு, விடிவி கணேஷ், மலையாள நடிகர் சாக்கோ, அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்தில் வில்லன்கள் யாரென்பதை மட்டும் ரொம்ப சஸ்பென்ஸாக வைத்திருக்கிறது தயாரிப்பு நிறுவமனான சன்பிக்சர்ஸ். நமக்குக்கிடைத்த தகவல்படி, விஜய்க்கு வில்லனாக மூன்று நடிகர்கள் நடிக்கிறார்களாம். அதில், இயக்குநர் செல்வராகவன் மற்றும் மலையாள நடிகர் சாக்கோ இருவரும் விஜய்க்கு வில்லான நடிக்க இருப்பது உறுதியாகிவிட்டது. அதோடு, சார்பட்டா பரம்பரையில் டான்ஸிங் ரோஸாக நடித்த ஷபீரிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்களாம்.

சார்பட்டா பரம்பரை ஹிட்டுக்குப் பிறகு, ஷபீருக்கு வாய்ப்புகள் குவிந்துவருகிறது. குறிப்பாக, விஜய் படத்திலிருந்து வாய்ப்பு வந்திருக்கிறது. இவரும் சம்மதம் தெரிவித்துவிட்டால், அடுத்தக் கட்ட ஷூட்டிங்கில் விஜய்க்கு வில்லனாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- ஆதினி

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

அர்ஜுன் மீது 'மீ டூ 'புகார்: விரைவில் விசாரணை அறிக்கை!

2 நிமிட வாசிப்பு

அர்ஜுன் மீது 'மீ டூ 'புகார்:  விரைவில் விசாரணை அறிக்கை!

அஜித்துக்கு கைதட்டல் வாங்கிக்கொடுத்த சிவசங்கர்: கே.எஸ்.ரவிகுமார் ...

3 நிமிட வாசிப்பு

அஜித்துக்கு கைதட்டல் வாங்கிக்கொடுத்த சிவசங்கர்: கே.எஸ்.ரவிகுமார்

ஞாயிறு 8 ஆக 2021