மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 7 ஆக 2021

ஓடிடியில் சந்தானம், ஹர்பஜன் சிங் படம்!

ஓடிடியில் சந்தானம், ஹர்பஜன் சிங்  படம்!

காமெடியன் சந்தானத்துக்கும், ஹீரோ சந்தானத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. காமெடியனாக ஒரு வருடத்துக்கு எக்கச்சக்க படங்களைக்கொடுத்தவர், இப்போது ஹீரோ ஆன பிறகு வருடத்துக்கு ஒரு படமே மிகப்பெரிய சவாலாகிவிட்டது.

‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் சந்தானம். அதன்பிறகு வெளியான இனிமே இப்படித்தான் படமும் பெரிதாக கைகொடுக்கவில்லை. சந்தானத்துக்கு ஹீரோவாக நல்ல ஓபனிங் கொடுத்த படம் ‘தில்லுக்குத் துட்டு’. அதன்பிறகு, கவனம் ஈர்த்தப் படம் ‘A1’. சென்ற வருடம் வெளியான டகால்டி, பிஸ்கோத் படங்கள் இரண்டுமே வியாபார ரீதியாக தோல்விப் படமே.

இந்த வருடத்தில் ‘A1’ இயக்குநரின் அடுத்தப் படமான ‘பாரிஸ் ஜெயராஜ்’ வெளியாகி கொஞ்சம் கவனம் ஈர்த்தது. இந்நிலையில், சந்தானத்தின் இரண்டு படங்கள் அடுத்தடுத்து ரிலீஸூக்கு நெருங்கிவிட்டது.

ஒன்று, இயக்குநர் அறிவழகனிடம் உதவியாளராக இருந்த ஸ்ரீனிவாச ராவ் இயக்கியிருக்கும் ‘ சபாபதி’, மற்றொன்று கார்த்திக் யோகி இயக்கத்தில் ‘டிக்கிலோனா’.

இதில், சபாபதி படத்தை நேரடியாக டிஜிட்டலில் ப்ரீமியர் செய்வதற்கான பேச்சுவார்த்தை போய்க் கொண்டிருக்கிறது. அதோடு, சாட்டிலைட் உரிமையை கலர்ஸ் டிவி கைப்பற்றியுள்ளது. தற்பொழுது, டிக்கிலோனா படத்தையும் ஓடிடிக்கு கொண்டுவரும் திட்டங்கள் போய்க் கொண்டிருக்காம்.

கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் சந்தானத்துடன் இந்தியன் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் முக்கிய ரோலில் நடிக்க உருவாகிவரும் படம் டிக்கிலோனா. சந்தானத்துக்கு நாயகிகளாக அனைகா, ஷெரின் நடிக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் முனிஷ்காந்த், மொட்ட ராஜேந்திரனுடன் பிரபல யூடியூப் விமர்சகர் பிரசாந்த் நடித்திருக்கிறார். இந்தப் படத்துக்கான சென்சார் பணிகளும் முடிந்து, க்ளீன் யூ சான்றிதழ் பெற்றிருக்கிறது.

இந்தப் படத்தில் வில்லன்,ஹீரோ & காமெடியன் என பல கெட்டப்புகளில் வருகிறார் சந்தானம். நமக்குக் கிடைத்த தகவல்படி, இந்தப் படத்தை வருகிற செப்டம்பரில் ஜீ5 ஓடிடியில் வெளியிட அதிக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

சந்தானம் நடித்து ‘மன்னவன் வந்தானடி’, ‘சர்வர் சுந்தரம்’ படங்கள் மட்டுமே இன்னும் ரிலீஸாகாமல் கிடப்பில் கிடப்பது குறிப்பிடத்தக்கது.

- ஆதினி

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

தன் வாயால் சர்ச்சையில் சிக்கிய அஷ்வின்

7 நிமிட வாசிப்பு

தன் வாயால்  சர்ச்சையில் சிக்கிய அஷ்வின்

அதர்வா படத்தை ராஜ்கிரண் தவிர்க்கிறாரா?

2 நிமிட வாசிப்பு

அதர்வா படத்தை ராஜ்கிரண் தவிர்க்கிறாரா?

சனி 7 ஆக 2021