மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 7 ஆக 2021

பீஸ்ட் : கொள்கையை மாற்றிய விஜய்

பீஸ்ட் : கொள்கையை மாற்றிய விஜய்

படத்துக்குப் படம் ஹிட் லிஸ்டை எகிற வைத்துக் கொண்டிருக்கிறார் விஜய். அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான பிகில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதியுடன் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ என தொடர் ஹிட் வரிசையில், அடுத்த ரிலீஸ் ‘பீஸ்ட்’.

விஜய்யின் 65வது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க வேண்டியது. ஆனால், முருகதாஸ் சொன்ன கதையில் விஜய்க்கு இருந்த மாற்றுக் கருத்துக் காரணமாக இந்தக் கூட்டணி இணையவில்லை. அதனால், ஏ.ஆர்.முருகதாஸூக்குச் சென்ற வாய்ப்பு நெல்சனுக்குக் கிடைத்தது.

நயன்தாரா நடித்து வெளியான கோலமாவு கோகிலா, சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் ‘டாக்டர்’ படங்களை இயக்கியவர் நெல்சன். கூடுதாக, சிம்புவுக்கு ‘வேட்டை மன்னன்’ எனும் படம் டிராப் ஆனது நினைவிருக்கலாம். அந்தப் பட இயக்குநர் தான் இந்த நெல்சன்.

நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடிக்க அனிருத் இசையில் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில், சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘பீஸ்ட்’ படு வேகமாக நடந்துவருகிறது.

பீஸ்ட் படத்தை அடுத்த வருட ஜனவரியில் பொங்கல் பண்டிகை சிறப்பாக வெளியிட திட்டமிட்டிருக்கிறது படக்குழு. அதன்படி, படத்துக்கான முதல் கட்ட ஷெட்யூல் ஜார்ஜியாவில் நடந்தது. அதன்பிறகு, அடுத்தடுத்த கட்டப் படப்பிடிப்புகள் சென்னையில் நடந்துவருகிறது.

பொதுவாக, விஜய் படத்தின் படப்பிடிப்பில் சில விதிமுறைகள் பின்பற்றப்படும். சரியாக எட்டு மணிநேரம் மட்டுமே ஷூட்டிங்கில் கலந்துகொள்வார் விஜய். அதுபோல, ஞாயிற்றுக் கிழமைகளில் விஜய் பட ஷூட்டிங் இருக்காது. உதாரணமாக, விஜய் படத்துக்காக வெளிநாடு ஷுட்டிங்கிற்கு செல்லும் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கு செம கொண்டாட்டமாக இருக்கும். ஏனெனில், விஜய் எட்டு மணிநேரம் மட்டுமே நடிப்பார் என்பதால் எக்கச்சக்க நேரம் மிச்சமாகும். அதனால், சுற்றிப் பார்க்க நேரம் கிடைக்கும்.

இப்படியான விஜய்யின் கொள்கையை பீஸ்ட் படம் மாற்றிவிட்டது. பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் 12 மணிநேரத்துக்கு மேல் செல்கிறதாம். அதோடு, கடந்த ஞாயிற்றுக் கிழமையும் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்யை பார்க்க நேர்ந்தது. அதற்கு என்ன காரணம் என விசாரித்தால், பூஜா ஹெக்டேவை கை காட்டுகிறது படக்குழு.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி என செம பிஸியான நடிகையாக இருக்கிறார் பூஜா ஹெக்டே. இவரின் தேதிகள் கிடைப்பதில் இருக்கும் சிக்கல் காரணமாக படப்பிடிப்பை படுவேகமாக நடத்திவருகிறது படக்குழு. அதன் காரணமாக, தயாரிப்பாளரின் டென்ஷனைப் புரிந்துகொண்டு விஜய்யும் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறாராம்.

- தீரன்

நாகசைதன்யா குடும்ப நிகழ்வில் கலந்துகொள்ளாத சமந்தா

3 நிமிட வாசிப்பு

நாகசைதன்யா குடும்ப நிகழ்வில் கலந்துகொள்ளாத சமந்தா

எஸ்பிபியின் மனதில் இளையராஜா

4 நிமிட வாசிப்பு

எஸ்பிபியின் மனதில் இளையராஜா

ராய் லட்சுமியிடம் ரோபோ சங்கர் நடந்து கொண்ட விதம்!

5 நிமிட வாசிப்பு

ராய் லட்சுமியிடம் ரோபோ சங்கர் நடந்து கொண்ட விதம்!

சனி 7 ஆக 2021