மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 6 ஆக 2021

‘ஆர் ஆர் ஆர்’ படப்பிடிப்புக்குச் செல்ல ஐடிகார்டு கட்டாயம்!

‘ஆர் ஆர் ஆர்’  படப்பிடிப்புக்குச் செல்ல ஐடிகார்டு கட்டாயம்!

பாகுபலி படத்தைத் தொடர்ந்து, அடுத்தப் பிரம்மாண்டத்தை உருவாக்கி வருகிறார் இயக்குநர் ராஜமெளலி. ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிக்க உருவாகிவரும் படம் தான் ‘ஆர் ஆர் ஆர்’. அதாவது, ‘ரணம் ரத்தம் ரெளத்ரம்’ எனும் இப்படத்தில் அலியா பட், சமுத்திரகனி, அஜய் தேவ்கன், ஸ்ரேயா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் டீஸர் வீடியோக்கள் வெளியாகி பெரியளவில் வரவேற்பைப் பெற்றது.

சமீபத்தில் படத்திலிருந்து முதல் சிங்கிளாக ‘நட்பு’ எனும் பாடல் வெளியானது. தமிழில் ‘நட்பு’ எனும் பெயரிலும், தெலுங்கு, கன்னடம் , இந்தியில் ‘தோஸ்து’ எனும் பெயரிலும் , மலையாளத்தில் ’பிரியம்’ எனும் பெயரிலும் வீடியோ வெளியானது. இப்பாடலை தமிழில் அனிருத், தெலுங்கு வெர்ஷனை ஹேமசந்திரா, கன்னடத்தில் யாசின் நிசார், மலையாள வெர்ஷனை விஜய் யேசுதாஸ், இந்தியில் அமித் த்ரிவேதி ஆகியோர் பாடியுள்ளனர். ஒவ்வொரு மொழியிலும் டிரெண்ட்டிங் பாடகர்களைத் தேர்ந்தெடுத்து பாட வைத்திருக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு முக்கால் பாகத்திற்கும் மேல் முடிந்துவிட்டது. இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது படக்குழு. ஆர்.ஆர்.ஆர். படத்தின் படப்பிடிப்புக்காக ஒட்டுமொத்தக் குழுவும் உக்ரைனில் இருக்கிறது. ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து ஜூனியர் என்.டி.ஆர். ஒரு புகைப்படமொன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆரும், ராஜமெளலியும் ஐடிகார்டு அணிந்துள்ளனர்.

பலகோடி செலவில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் இப்படத்தின் தகவல்கள், வீடியோக்கள் ஏதுவும் லீக் ஆகிவிடக் கூடாது என்பதற்காக பல்வேறு கட்ட நடவடிக்கைகளை படக்குழு மேற்கொண்டுவருகிறது. அதிலொன்று தான், ஐடிகார்டு.

அலுவலகங்களில் பணியாற்றுபவர்களுக்குத் தரப்படுவது போல, ‘ஆர் ஆர் ஆர்’. படக்குழுவினர் அனைவருக்குமே ஐடி கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. படத்தில் நடிக்கும் நடிகர்களில் தொடங்கி லைட் மேன் வரை அனைவருமே ஐடி கார்டு அணிவது கட்டாயம். அதோடு, ஐடி கார்டு இல்லாமல் நடிகர்கள் வந்தால் கூட உள்ளே விட மாட்டார்களாம்.

ஜூனியர் என்.டி.ஆர் நடித்தப் படங்களிலேயே முதன்முறையாக ஐடி கார்டு அணிந்து படக்குழுவுக்கு வருவது இந்தப் படத்துக்குத் தான். அதோடு, பல வருடங்களுக்குப் பிறகு ஐடி கார்டு அணிவதாக தெரிவித்துள்ளார் ஜுனியர் என்.டி.ஆர். இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது. இப்படமானது வருகிற அக்டோபர் 13ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

- ஆதினி

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

தன் வாயால் சர்ச்சையில் சிக்கிய அஷ்வின்

7 நிமிட வாசிப்பு

தன் வாயால்  சர்ச்சையில் சிக்கிய அஷ்வின்

அதர்வா படத்தை ராஜ்கிரண் தவிர்க்கிறாரா?

2 நிமிட வாசிப்பு

அதர்வா படத்தை ராஜ்கிரண் தவிர்க்கிறாரா?

வெள்ளி 6 ஆக 2021