மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 6 ஆக 2021

அதான் கை வச்சிட்டீங்களே அண்ணாமலை: அப்டேட் குமாரு

அதான் கை வச்சிட்டீங்களே அண்ணாமலை: அப்டேட் குமாரு

எங்களை எதிர்த்தா சும்மா இருக்கமாட்டோம், உங்க அடிப்படை வரைக்கும் போவோம், பிசினஸ்ல கை வைப்போம்னு நேத்து தஞ்சாவூர்ல நடந்த கூட்டத்துல பிஜேபி தலைவர் அண்ணாமலை பேசிக்கிட்டிருந்தார். நம்ம நண்பரோட கடையில உட்கார்ந்து இதை டிவியில பாத்துக்கிட்டிருந்தோம். அப்ப திடீர்னு நண்பர் டென்ஷனாகி, ‘அதான் எங்க எல்லார் பிசினஸ்லயும் கை வச்சிட்டீங்களே அண்ணாமலை, இன்னும் வைக்க என்ன இருக்கு’னு தலையில அடிச்சுக்கிட்டாரு... நான் அப்டியே ஷாக் ஆயிட்டேன்

நீங்க அப்டேட் பாருங்க

சாய் பெருமாள்

எவ்வளவு பசியையும் போக்ககூடிய வல்லமை படைத்தது பப்ஸம், தேநீரும்.

-verified

மயக்குநன்

கர்நாடக அரசுக்கு எதிரான போராட்டம்!- மாட்டுவண்டியில் வந்த அண்ணாமலை.

பாவம்... பெட்ரோல், டீசல் விலையை அவராலேயே சமாளிக்க முடியல போல..?!

கோழியின் கிறுக்கல்!!

கையில் காசில்லாத வடிவேலை பழி வாங்க டவுன் பஸ்ஸில் ஏற்றிவிடும் பார்த்திபன் போலவே,

நம்மை திருமண பஸ்ஸில் ஏற்றி விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள் உறவினர்கள்!!

பர்வீன் யூனுஸ்

ஒன்றரை வருஷமா மாஸ்க் போட்டு வாழ்கிறோம். நகைகடையில் மூக்குத்தி சேல்ஸ் டல் ஆகி இருக்குமே..?

தர்மஅடி தர்மலிங்கம்

காவல் காக்கும் அய்யனாரை சுற்றிலும் காவலுக்கு இரும்பு வேலி!

Mallika Nallusamy

தோல்வி துரத்துகிறது என்றால், வெற்றியை நெருங்குகிறாய் என்று அர்த்தம்..!!

மயக்குநன்

சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்ட நடிகர் தனுஷுக்கு உயர் நீதிமன்ற நீதிபதி கண்டனம்!- செய்தி.

'கார்'காலம் இன்னும் முடியல போல..?!

'வி'சித்திரன்

எல்லைகளே இல்லாதலால்தான் விருப்பப்படி வடிவமைக்கப்படுகின்றன கற்பனைகள்

ச ப் பா ணி

ஜாதி, மதம், இனம், மொழி இதையெல்லாம் தாண்டி வருவது காதல் மட்டுமல்ல Corona'வும்தான்.

மயக்குநன்

'மாற்றங்கள்' நிறைந்த சவாலான காலங்களை நாம் கடந்து செல்கிறோம்!- குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

கொரோனா 'உருமாற்றங்கள்' நிறைந்த சவாலான காலங்கள்..!

கோழியின் கிறுக்கல்!!

இந்தியா மூன்று பக்கமும் கடல் சூழப்பட்டது,

நான்கு பக்கமும் கடன் சூழப்பட்டது!!

-லாக் ஆஃப்

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

3 நிமிட வாசிப்பு

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

உதயநிதி படத்தில் வடிவேலு?

3 நிமிட வாசிப்பு

உதயநிதி படத்தில் வடிவேலு?

வடிவேலு படத் தலைப்பு: சிவகார்த்திகேயன் கருத்து!

3 நிமிட வாசிப்பு

வடிவேலு படத் தலைப்பு: சிவகார்த்திகேயன் கருத்து!

வெள்ளி 6 ஆக 2021